ஜார்க்கண்ட் தேர்தல்.. பாஜக வேட்பாளர் லிஸ்ட் வெளியீடு.. ஹேமேந்த் சோரனுக்கு கொடுத்த "சர்ப்ரைஸ்"
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் சரைக்கேலாவிலும், முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 13 மற்றும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியை தக்க வைக்க இந்தியா கூட்டணி கட்சிகளும், ஆட்சியை மீண்டும் பிடிக்க பாஜகவும் வியூகம் வகுத்து வருகின்றன.

பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், எல்ஜேபி, ஏஜே எஸ் யூ ஆகிய கட்சிகள் உள்ளன. இதில் பாஜக 68 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், ஏஜே எஸ் யூ கட்சி 10 இடங்களிலும் எல்.ஜே.பி (ஆர்) ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறந்து வருகிறது. தேசிய தலைவர்கள் பலரும் ஜார்க்கண்டில் முகாமிட்டு பிராசரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் ஜார்க்கண்டில் இன்று 66 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜார்க்கண்ட் அரசியலில் மூத்த தலைவரான பாபுலால் மரண்டி, முன்னாள் முதல்வரும், ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவராக இருந்தவருமான சம்பாய் சோரன் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவித்த சில நிமிடங்களில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக.
ஜார்க்கண்ட் பாஜக தலைவரான மரண்டி, தன்வார் தொகுதியில் போட்டியிடுகிறார். சம்பாய் சோரன் மற்றும் அவரது மகன் பாபுலால் சோரன் முறையே சரைகெல்லா மற்றும் கட்ஷிலா தொகுதியில் போட்டியிடுகிறார்கள். ஹேமந்த் சோரன் மனைவியின் உறவினரான சீதா சோரனும் இந்த முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.
ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ராஷ்டிரிய ஜனதா தளம், இடது சாரிகள் கட்சிகளுக்கு 11 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications