ஜார்க்கண்ட் தேர்தல்.. 2019-ல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.. அப்படியே பலித்ததா? இதோ டேட்டா
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. தற்போதைய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்ப்பதற்கு முன்னால், கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, கருத்துக்கணிப்புகள் அப்படியே பலித்ததா என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி 43 தொகுதிகளிலும், இரண்டாம் கட்ட தேர்தல் 20 ஆம் தேதி (இன்று) நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.

தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில், பல்வேறு முன்னணி செய்தி ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று சில ஊடகங்களின் கருத்துக்கணிப்பும், தொங்கு சட்டசபை அமையும் என சில ஊடகங்களும் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளன. ஜார்க்கண்டில் தற்போது ஹேமந்த் சோரன் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த அளவு துல்லியமாக இருந்தது என்பது பற்றி பார்ப்போம். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவியது. நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 20 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் ஹேமந்த் சோரன் கட்சி 30 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வென்றது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கூட்டணி ஆட்சி அங்கு அமைந்தது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
2019 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் விவரம்:
* இந்தியா டுடே - மை ஆக்ஸிஸ்:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி - 43 (வெற்றி)
பாஜக - 27
என கணித்து இருந்தது. தேர்தல் முடிவுகளும் கிட்டத்தட்ட அப்படியே தான் அமைந்தன.
* ஏபிபி- சி வோட்டர்:
ஏபிபி- சி வோட்டர் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தொங்கு சட்டசபை அமையும் எனக் கூறப்பட்டு இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 35 இடங்களும் பாஜகவிற்கு 32 இடங்களும் கிடைக்கும் எனக் கணித்து இருந்தது.
* டைம்ஸ் நவ்:
டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 44 இடங்களும் பாஜகவுக்கு 28 இடங்களும் எனக் கூறப்பட்டு இருந்தது.
ஜார்க்கண்ட் மாநிலம்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு எதிர்க்கட்சி வரிசையில் பாஜக இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஒரு இடத்தையும் கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைத்தன.
பாஜகவுக்கு 25 இடங்களும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவுக்கு 3 இடங்களும், அகில ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கத்துக்கு 2 இடங்களும், மார்க்சிய லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன. சுயேச்சைகள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
கடந்த தேர்தல்: அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இங்கு நிலைமை மாறியது. மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 8 தொகுதிகளை பாஜக வெற்றியை ருசித்தது. ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், அகில ஜார்கண்ட் மாணவர்கள் சங்கம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
இந்த தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் ஓர் அணியும், பாஜக தலைமையில் மற்றொரு அணியும் மோதுகின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் அக்கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 28 தொகுதிகளும் ஏனைய இடங்கள் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில், அந்த கட்சி 68 தொகுதிகளிலும், அகில இந்திய ஜார்கண்ட் மாணவர்கள் சங்கம் 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதளம் 2 தொகுதிகளிலும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
சுரங்க முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமினில் இருக்கும் ஹேமந்த் சோரனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பாஜக தீவிர பிரசாரம் மேற்கோண்டது. அதேபோல, இலவசங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாஜக, வாக்காளர்களை கவர பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆட்சியை பிடிக்க பாஜகவும், ஆட்சியை தக்க வைக்க இந்தியா கட்டணியும் பலப்பரிட்சை நடத்தியுள்ளன. வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
-
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications