ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: பாஜக மூத்த தலைவர் பிரவீன் பிரபாகரன் திடீர் ராஜினாமா!
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முதன்மை செய்தித் தொடர்பாளருமான பிரவீன் பிரபாகரன் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக இடங்களில் பாஜக வெல்லும்; ஆனால் தொங்கு சட்டசபைதான் அமையும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாஜகவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பிரவீன் பிரபாகரன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார்.
மேலும் மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா தலைமையிலான என்பிபி கட்சியில் அவர் இணைந்துள்ளார். அக்கட்சியின் வேட்பாளராக நாலா தொகுதியில் பிரவீன் பிரபாகர் போட்டியிடுகிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரவீன் பிரபாகரன், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரது தலைமையில் நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஜார்க்கண்ட் பின் தங்கியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கத்துக்காக அனைத்து வகைகளிலும் பணியாற்றினேன். ஜார்க்கண்ட் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணிபுரிவேன்.
பாஜகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதில் அதிருப்தி இருந்தது. அதனால் கட்சியில் இருந்து வெளியேறினேன். ஜார்க்கண்ட் மாநில பாஜகவினர் தங்களை சுயபரிசோதனைக்குட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications