சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது- முதல்வர் பதவி ராஜினாமா!
ராஞ்சி: சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவரான சாம்பாய் சோரன் பதவியேற்க உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். ஹேமந்த் சோரன் மீது சுரங்க முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. ஹேமந்த் சோரன் மீதான வழக்கில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் ஹேமந்த் சோரனை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் விசாரணைக்கு ஆஜரானர் ஹேமந்த் சோரன். இதனையடுத்து மீண்டும் விசாரணைக்கு அழைத்தது அமலாக்கத்துறை. ஆனால் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாமல் திடீரென தலைமறைவானார். அவருக்காக டெல்லி பங்களாவில் 30 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ரூ36 லட்சம் ரொக்கப் பணமும் கைப்பற்றது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து ராஞ்சி திரும்பிய ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஜனவரி 31-ந் தேதி அமலாக்கத்துறை விசாரணையின் போது தாம் கைது செய்யப்பட்டால் புதிய முதல்வர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஹேமந்த் சோரன் மனைவி கல்பனாவை முதல்வராக்க விரும்புவதும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கல்பனாவும் பங்கேற்றார்.
இப்பின்னணியில் இன்று ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகையை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
6 மணி நேர விசாரணைக்குப் பின்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக தம்மை கைது செய்யும் அமலாக்கத்துறை மெமோவில் கையெழுத்திட ஹேமந்த் சோரன் மறுத்ததாகவும் கூறப்பட்டது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதால் ஹேமந்த் சோரன் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதில் புதிய முதல்வராக சாம்பாய் சோரன் பதவியேற்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சாம்பாய் சோரன், புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கோரும் கடிதத்தை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அம்மாநில ஆளுநரிடம் கொடுத்தனர். இதனால் ஜார்க்கண்ட் மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications