ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம்.-காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி 47 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 25 இடங்களிம் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்த வந்தது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமை முடிந்து திங்கள்கிழமை(இன்று) முடிவுகள் வெளியாகின.
இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக கடுமையாக போராடியது. அது போல் காங்கிரஸும் அங்குள்ள மாநில கட்சிகளுடன் மகாகத்பந்தன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க போட்டியிட்டது.
பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என கூறியது. அதன்படி . காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களில் வென்று 47இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.அதன் விவரம்:
7:23 PM, 17 Jan
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 2019: ஜார்கண்டில் அதிகாரத்திற்கு ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணி
8:35 AM, 24 Dec
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது.
6:54 AM, 24 Dec
ஜே.எம்.எம்.-காங் கூட்டணி 47 இடங்களில் வெற்றி- பாஜகவுக்கு 25 தொகுதிகள்: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
8:55 PM, 23 Dec
மக்கள் அலை பாஜகவுக்கு ஆதரவாக இல்லை: ரகுபர் தாஸ்
8:55 PM, 23 Dec
ஆனால் மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் மதிக்கிறோம்
8:55 PM, 23 Dec
மக்களின் கனவுகளை நிறைவேற்ற ஹேமந்த் சோரன் செயல்படுவார் என நம்புகிறேன்
8:55 PM, 23 Dec
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின் ரகுபர் தாஸ் பேட்டி
8:08 PM, 23 Dec
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால் முதல்வர் பதவியை ரகுபர் தாஸ் ராஜினாமா செய்தார்.
8:08 PM, 23 Dec
ரகுபர் தாஸ் ராஜினாமா கடிதத்தை ராஜ்பவன் சென்று ஆளுநர் தரும்படி முர்முவிடம் அளித்தார்.
7:50 PM, 23 Dec
ஜார்க்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் ரகுபர் தாஸ். இதற்காக ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஹேமந்த் சோரன் 2 தொகுதியிலும் வெற்றி
7:45 PM, 23 Dec
தும்கா தொகுதியில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் 13188 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
7:45 PM, 23 Dec
பார்கைட் தொகுதியில் 25,740 வாக்குகள் வித்தியாசத்தில் ஹேமந்த் சோரன் வெற்றி
Top Fight - கும்லா
பூஷன் திர்கே
(JMM)
Won
மிஷிர் குஜுர்
(BJP)
Lost
7:02 PM, 23 Dec
ஜார்கண்ட் முதல்வரான பாஜக வேட்பாளர் ரகுபர் தாசை விடவும் 12 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்ற சுயேச்சை சர்யூ ராய்
5:27 PM, 23 Dec
ஜார்க்கண்ட் மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர், நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்: ஹேமந்த் சோரன் பேட்டி
Hemant Soren, Jharkhand Mukti Morcha (JMM) in Ranchi: Today a new chapter will begin for this state. I want to assure everyone that their hopes will not be broken irrespective of their caste, creed, religion and profession. #JharkhandElectionResultspic.twitter.com/vIONxhl98K
எதிர்க்கட்சிகள் இணைந்தால் பாஜகவை தோற்கடிக்க முடியும்.
பாஜக தோற்கடிக்க முடியாத கட்சியில்லை- ப. சிதம்பரம் பேட்டி
4:07 PM, 23 Dec
ஜார்கண்ட்: 49 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை.
பெரும்பான்மைக்கு 41 தொகுதிகள் தேவை என்ற நிலையில் அமோக முன்னிலை.
பாஜக 22 தொகுதிகளில்தான் முன்னிலை பெற்றுள்ளது.
3:38 PM, 23 Dec
ராஞ்சியில் உள்ள முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் இல்லத்திற்கு சென்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தலைவர் ஹேமந்த் சோரன் ஆலோசனை
ராஞ்சியில் உள்ள முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் இல்லத்திற்கு சென்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தலைவர் ஹேமந்த் சோரன் ஆலோசனை
Tejashwi Yadav, RJD: There is going to be a clean sweep for Mahagathbandhan (grand alliance) in this election. We have fought elections under leadership of Hemant Soren. He is going to be the Chief Minister. #JharkhandAssemblyPollspic.twitter.com/EyjkwkTJ8n