Jharkhand Lok Sabha Election Results Live: 14 தொகுதிகளில் 8ஐ கைப்பற்றிய பாஜக
ராய்ப்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 லோக்சபா தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 8 இடங்களிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 3 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் ஏஜேஎஸ்யு கட்சி ஒரு இடத்திலும் வென்றுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக மே 13, மே 20, மே 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி அதிக இடங்களை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 11 இடங்களிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், அகில ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களை வென்றன.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் பாஜக 12 இடங்களிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2 இடங்களிலும் வென்றது. இந்த 2024 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் காங்கிரஸ் கட்சியும் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமண்ட் சோரனின் சிறை வாசம், அவரது தலைமை பண்பு உள்ளிட்டவைகளால் இந்தியா கூட்டணி இந்த முறை கூடுதல் தொகுதிகளை பெறும் என தெரிகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி பாஜக 9 முதல் 12 இடங்களையும் இந்தியா கூட்டணி 2 முதல் 5 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. தன்பத், ராஞ்சி, ஜம்ஷெத்பூர் ஆகிய தொகுதிகள் முக்கிய தொகுதிகளாக பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்டில் மொத்தம் 14 தொகுதிகளில் பாஜக 8 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் வென்றது. அது போல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 3 இடத்திலும் ஏஜேஎஸ்யூ கட்சி ஒரு இடத்திலும் வென்றுள்ளது.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications