எம்எல்ஏக்களை காப்பாற்றும் பிளான் சொதப்பல்! ஜார்கண்டில் திடீரென விமானங்கள் ரத்து! கையை பிசையும் சோரன்
ராஞ்சி: ஜார்கண்ட்டில் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் வெளிமாநிலத்திற்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், திடீரென மோசமான வானிலையால் விமானங்கள் புறப்படவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதல்வரான ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர்.

10 முறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர் கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரு முறை மட்டுமே அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். மீண்டும் விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பிய போதிலும் அவர் ஆஜராகவில்லை.
ராஜினாமா: இந்தச் சூழலில் தான் நேற்று ராஞ்சியில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் வரை அவரிடம் விசாரணை நடந்த நிலையில், இறுதியில் அவர் கைது செய்யப்பட்டார். இதனால் ஜார்க்ண்ட் ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதற்கிடையே ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே முதல்வர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியைச் சார்பில் சாம்பாய் சோரன் முதல்வராகத் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சாம்பாய் சோரன் ஆட்சி அமைக்கவும் உரிமை கோரினார். இருப்பினும், ஜார்க்கண்ட் ஆளுநர் சாம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை.
ரிசார்ட் அரசியல்: இந்தச் சூழலில் தான் அங்கேயும் இப்போது கூவத்தூர் அரசியலைப் போல ரிசார்ட் அரசியல் ஆரம்பித்துள்ளது. ஆளும் ஜேஎம்எம் கூட்டணி எம்எல்ஏக்கள் அனைவரும் முதலில் பேருந்தில் ஏற்றப்பட்ட ராஞ்சி விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் தனி விமானம் மூலம் வெளியூர் அழைத்துச் செல்லப்பட திட்டமிட்டனர். இருப்பினும், மோசமான வானிலை காரணமாக ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து அவர்களால் புறப்பட முடியவில்லை.
பாஜக குதிரை பேரத்தைத் தடுக்கவே இந்த நடவடிக்கையைச் சம்பாய் சோரன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். எம்எல்ஏக்கள் அனைவரும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் தெலுங்கானாவுக்குச் செல்ல திட்டமிடப்பட்டது. இருப்பினும், மோசமான வானிலை அனைத்தையும் மாற்றிவிட்டது. இப்போது என்ன அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ன நடந்தது: முன்னதாக இது தொடர்பாக ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் கூறுகையில், "நாங்கள் விமான நிலையத்திற்குச் செல்கிறோம்... அவர்கள் (பாஜக) எப்படிப்பட்டவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்... அவர்களால் எந்த நேரத்திலும் எதையும் செய்ய முடியும். எனவே அனைவரும் இங்கிருந்து கிளம்புகிறோம். எங்களுடன் மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள்" என்றார்.
ராஞ்சியில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் இருந்து ஆளும் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் பேருந்தில் விமான நிலையம் நோக்கிச் செல்லும் வீடியோவும் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இவை எல்லாம் நடக்க சில மணி நேரங்களுக்கு முன்பு தான் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பாய் சோரன், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
சம்பாய் சோரன்: இது தொடர்பாகச் சம்பாய் சோரன் கூறுகையில், "எங்களுக்கு 43 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. அதற்கான அறிக்கையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இந்த எண்ணிக்கை 46-47வரை செல்லும்.. எனவே ஆட்சி அமைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களது கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. அதில் எந்தவொரு சிக்கலும் இல்லை" என்றார். மேலும் அனைத்து எம்எல்ஏக்களும் சம்பாய் சோரனுக்கு ஆதரவு தருவதைக் காட்டும் வீடியோவும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்: இருப்பினும், ஆளுநர் ராதாகிருஷ்ணன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத நிலையில், ஆளும் தரப்பு எம்எல்ஏக்கள் ஹைதராபாத் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. இந்தச் சூழலில் விமானங்களும் ரத்தாகவே அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
Election Exclusive: வாயில் வாஸ்து சரியில்ல.. ஜெயிச்சாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிக்கல்! திமுக போடும் பலே ப்ளான்? -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா!












Click it and Unblock the Notifications