ஹரியானா பாஜக ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸுடன் கை கோர்க்க ரெடி- துஷ்யந்த் சிங் சவுதாலா திடீர் அறிவிப்பு!
சண்டிகர்: ஹரியனாவில் பெரும்பான்மையை இழந்த பாஜக ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸுடன் இணைந்து செயல்பட தயார் என 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா சட்டசபைக்கு 2019-ல் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் எந்த ஒரு கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. 90 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 46 எம்.எல்.ஏக்கள். அத்தேர்தலில் பாஜக 40; காங்கிரஸ் 31; ஜேஜேபி 10-ல் வென்றன. 7 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் ஜேஜேபி கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள், சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஜேஜேபி கட்சி, பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சுயேட்சைகளில் 3 பேர், பாஜக அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு காங்கிரஸை ஆதரிக்கின்றனர்.
தற்போது ஹரியானா சட்டசபையில் மொத்தம் 88 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 40 + ஆதரவு சுயேட்சைகள் 2 + ஹெச்எல் பி கட்சி 1 என மொத்தம் 43 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு தேவை 45 எம்.எல்.ஏக்கள். 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மையை இழந்து நிற்கிறது பாஜக அரசு.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 30+3 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது. மேலும் தற்போது 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சியும் காங்கிரஸை ஆதரிக்க தயாராக இருப்ப்தாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக துஷ்யந்த் சவுதாலா கூறுகையில், ஹரியானாவில் ஆளும் பாஜக அரசை அகற்றுவதற்கு காங்கிரஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஜேஜேபி கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவர் என தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ்+ ஜேஜேபி இணைந்து ஆளும் ஹரியானா பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ், ஜேஜேபி கட்சிகளை உடைத்து ஆட்சியை பாதுகாக்கவும் பாஜக தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications