ஊடக சுதந்திரத்தை முடக்குகிறதா மத்திய அரசின் 'ஃபேக் நியூஸ்' உத்தரவு? பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு
பொய் செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பத்திரிகைகள் மீதான தாக்குதல் என்று
Recommended Video

டெல்லி: பொய் செய்திகள் வெளியிடும் பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு, மூத்த பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல பத்திரிகைகள், டிவி சேனல் உள்ளிட்ட ஊடகங்களில், பொய்யான செய்திகள் வெளிவருவதாகவும், இவ்வாறு பொய்யான செய்திகளை வெளியிடும் நிருபர்களுக்கு அளிக்கப்படும் அரசு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய தகவல், ஒலிபரப்புதுறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று கூறினார்.

பொய் செய்தி வெளியிடும் நிருபர்கள் குறித்து, பிரஸ் கவுன்சில் மற்றும் தேசிய தொலைக்காட்சி கூட்டமைப்பு ஆகியவை விசாரிக்கும் என்று அவர் கூறினார்.
ஒரு முறை விதி மீறினால் 6 மாத தடை, இரண்டாவது முறை என்றால் 1 ஆண்டு தடை, 3வது முறை விதி மீறினால் நிரந்தரமாக அங்கீகாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பல பத்திரிகையாளர் அமைப்புகள், மூத்த பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "இது பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் மீதான நேரடி தாக்குதல். இது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டு வந்த அவதூறு தடுப்பு சட்டத்தை போன்றது. இதை எதிர்த்து அனைத்து பத்திரிகையாளர்களும் ஒற்றுமையுடன் போராட வேண்டும்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா கூறியுள்ளர்.
பொய் செய்தி எது என்பதை திட்டவட்டமாக தீர்மானிக்க முடியாத சூழலில், செய்தி வெளியிடுவதற்கே இது தடை விதிக்கும் செயல் என பத்திரிகையாளர்கள் கருதுகிறார்கள்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications