வெளிநாடுகளில் பங்களாக்கள்.. மலைக்க வைக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் சொத்து மதிப்பு
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ரூ.571 கோடி சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்த நிலையில், அதில் நடித்த ஜூனியர் என்டிஆர் உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரனும் ஜுனியர் என்டிஆர் உடன் நடந்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. ஆஸ்கர் உள்பட பல்வேறு சர்வதேச விருதுகளையும் குவித்துள்ளது.
இந்நிலையில் ஜுனியர் என்டிஆர் குறித்து பலரும் இணைதளங்களில் தேடி வருகிறார்கள். அவர் குறித்து சில தகவல்களை இப்போது பார்ப்போம்.

உண்மையான பெயர் தாரக்
தெலுங்கில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர், அவரது உண்மையான முழு பெயர் நந்தமுரி தாராகா ராமா ராவ் ஆகும். அதாவது அவரது உண்மையான பெயர் தாரக், சினிமாவிற்கு வந்த பின்னர் அவரை ஜூனியர் என்டிஆர் என அழைத்து வருகிறார்கள். அதுவே இப்போது நிலைத்துள்ளது.

ஆஸ்கர் வென்றார்
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரின் பேரனுமாகிய என்டி ராமாராவின் பேரன் தான் ஜூனியர் என்டிஆர். இவர் திரைப்பட ஹீரோ மட்டுமின்றி குச்சிப்புடி நடனக் கலைஞர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாகவும், தென்னிந்திய சினிமா ரசிகர்களால் விரும்பப்படுபவர். இயக்குனர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் அனைத்து இந்திய ரசிகர்களின் விருப்பமான நடிகராகி உள்ளார். தற்போது அவர் நடித்த இந்தப் படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்தப் படத்தின் தொடக்கக் காட்சியைப் பார்த்த ஹாலிவுட் இயக்குநர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பார் ஜூனியர் என்டிஆர்.

டாப் ஸ்டார்
அவரது ஆஸ்கார் வெற்றிக்குப் பிறகு, ஜூனியர் என்டிஆர் தனது அடுத்த மிகப்பெரிய படத்திற்கு தயாராகி வருகிறார். இதுவரை 35 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த அவர், தனது சம்பளத்தை 50 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் டாப் ஸ்டாராக இருக்கும் இவரது சொத்து மதிப்பு குறித்து ஆந்திர மீடியாக்கள் தற்போது பேசி வருகின்றன. 39 வயதான ஜூனியர் என்டிஆருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவருக்கு சொந்தமாக ஜெட் விமானம் உள்ளதாகவும் கோடிக்கணக்கான சொத்துக்களும் இருப்பதாக சொல்கின்றனர்.

விஜய் அஜித்
இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் தனது சம்பளத்தை 50 கோடியாக நிர்ணயம் செய்துள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. நம் தமிழ் ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித் போன்றவர்களை ஒப்பிடும்போது அவர் சம்பளம் இரண்டு அல்லது மூன்று மடங்கு குறைவு. மேலும் இவர் நம் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்க இன்னும் பத்து வருடங்கள் ஆகும் என்கிறார்கள். தெலுங்கு நடிகர்கள் ஆஸ்கர் விருது, பிரம்மாண்ட வசூல் வேட்டை என்ன சாதனைகள் செய்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், நடிகர் அஜித்குமார் என நம் தமிழ் ஹீரோக்களின் சம்பளத்தை நெருங்க முடியாத அளவிற்கு தூரமாக இருப்பதாக ஆந்திர ஊடகங்கள் சொல்கின்றன.

ஜூனியர் என்டிஆர் சொத்து
ஜூனியர் என்.டிஆரின் சொத்து விவரங்கள் பற்றிய தெலுங்கு ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். மொத்தம் ரூ.571 கோடிக்கு சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு ஜூனியர் என்.டி.ஆர் ரூ.36 கோடிவரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ரூ.25 கோடிக்கு சொகுசு பங்களா உள்ளது. ஜூனியர் என்.டி.ஆருக்கு மாத வருமானமாக ரூ.3 கோடி வருவதாகவும் சொல்கிறார்கள். பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் வைத்துள்ளதாகவும், அவசர தேவைகளுக்கு தனியார் ஜெட் விமானத்தை பயன்படுத்துவதாகவும், வெளிநாடுகளில் நிறைய பங்களாக்கள் வாங்கி போட்டுள்ளார் என்றும சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications