"தப்புக் கணக்கு".... ஜெ. தீர்ப்பை ஆய்வு செய்கிறார் நீதிபதி குமாரசாமி!
பெங்களூரு: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீது தான் அளித்த தீர்ப்பில் பல குறைபாடுகள் குறிப்பாக தப்புக் கணக்கு இருப்பதாக பரபரப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்தக் குறைபாடுகள் குறித்து நீதிபதி குமாரசாமி தனது சேம்பரில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நான்கு பேரின் அப்பீல் மனுக்களையும், அவர்களது தரப்பு வாதங்களையும் ஏற்று விடுதலை செய்து அதிரடி தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பின்போது அவர் நான்கு பேரின் சொத்துக் கணக்கு குறித்து முக்கியமாக குறிப்பிட்டு அதன் அடிப்படையில் விடுதலை செய்வதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் அங்குதான் பெரும் தப்பு நடந்து விட்டது. அதாவது குமாரசாமி பட்டியலிட்டுக் கூறியிருந்த சொத்துக்கணக்கில் பெரும் கூட்டல் கழித்தல் பிழை நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பார்த்ததுமே தெரியும் வகையிலான மிகப் பெரிய பிழை அந்தக் கூட்டல் கழித்தலில் இருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடே பெரிதும் எதிர்பார்த்த ஒரு மிகப் பெரிய வழக்கில், அதுவும் ஊழல் தொடர்பான, சொத்துக் குவிப்பு தொடர்பான அப்பீல் வழக்கில் இவ்வளவு அஜாக்கிரதையாக எப்படி நீதிபதி குமாரசாமி தவறிழைத்தார் என்று அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக கர்நாடக அரசு அப்பீல் செய்ய வேண்டும் என்று சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திலும் அதிமுகவைத் தவிர அத்தனை எதிர்க்கட்சிகளும் அப்பீல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பதற்கும் இது பெரும் குந்தகமாக மாறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வில் இறங்கியுள்ளார் நீதிபதி குமாரசாமி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தான் விசாரணை நடத்தி வந்த 14ம் எண் சேம்பரில் தனது உதவியார்களுடன் இணைந்து என்ன தவறு நடந்தது, அதை எப்படிச் சரி செய்வது என்பது குறித்து தீவிர ஆலோசனை மற்றும் ஆய்வில் நீதிபதி குமாரசாமி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் கணக்கை சரி செய்தாலும் தீர்ப்பை அவர் திருத்த சட்டத்தில் இடமில்லையாம். இதனிடையே, குமாரசாமி தானாக முன்வந்து தனது கணக்கீடு தவறை திருத்துவாரா, அல்லது, யாராவது இதுகுறித்து மனு தாக்கல் செய்யும்வரை காத்திருந்து, அந்த மனுவை ஆதாரமாக கொண்டு திருத்தம் செய்வாரா என்பது புரியாத புதிராக உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications