ஒரே நேர்கோட்டில் குவாலியர் அரச குடும்பம்.. பாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய சிந்தியா
போபால்: காங்கிரஸிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறியதன் மூலம் பாட்டி விஜய ராஜேவின் ஆசையை அவர் நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக இருந்தவர் சிந்தியா. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய பாடுபட்டவரும் அவரே. இந்த நிலையில் அவருக்கு முதல்வர் பதவியும், கட்சியில் முக்கியப் பதவியும் கொடுக்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ஆதரவு 16 எம்எல்ஏக்களுடன் கர்நாடகத்திற்கு பறந்ததன் மூலம் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இதையடுத்து அமித்ஷாவுடன் ஒரே காரில் சென்று டெல்லியில் உள்ள நரேந்திர மோடியை சந்தித்தார்.
மூவரும் ஒரு மணி நேரமாக ஆலோசனை நடத்தினர். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து அதற்கான ராஜினாமா கடிதத்தையும் காங்கிரஸ் தலைமையிடம் ஒப்படைத்தார்.
அதில் காங்கிரஸ் கட்சியில் இருந்தால் என்னால் மக்களுக்கு சேவையாற்றிட முடியாது என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இன்று அவரது தந்தை மாதவ் ராவின் பிறந்தநாள். சிந்தியா குடும்பத்தினர் பெரும்பாலானோர் பாஜக இருக்க சிந்தியா மட்டுமே காங்கிரஸில் இருந்து வந்தார்.
அனைவரும் ஒரே கட்சியில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் சிந்தியாவின் பாட்டியின் கடைசி ஆசையாகும். தற்போது காங்கிரஸில் இருந்து விலகியதன் மூலம் பாட்டியின் ஆசையை நிறைவேற்றி விட்டார் என்பதால் அரசே குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளது.












Click it and Unblock the Notifications