Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போடுங்கம்மா ஓட்டு.. கை சின்னத்தை பார்த்து.. பழக்க தோஷத்தில் வாக்கு கேட்ட பாஜக ஜோதிராதித்யா சிந்தியா

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என பாஜகவின் ஜோதிராதித்யா சிந்தியா பிரசாரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசத்தில் 28 சட்டசபை தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் 25 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதே ஜோதிராதித்யா சிந்தியாவால்தான்.

Jyotiraditya Scindias vote Hand Symbol video goes viral

ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவு முகாமை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறியதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் சிந்தியாவின் அரசியல் செல்வாக்கு என்ன என்பதை சொல்லப் போகிறது.

ஆகையால் ஜோதிராதித்யா சிந்தியா படுதீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பாஜக வேட்பாளர் இமார்டியை ஆதரித்து பிரசாரம் செய்த ஜோதிராதித்யா சிந்தியா பழைய ஞாபகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என வாக்கு கேட்டார். பின்னர் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என திருத்தி பேசினார்.

ஆனாலும் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியினர், ஜோதிராதித்யா சிந்தியாவின் தவறுதலான பேச்சை தங்களுக்கு சாதகமாக்கி கை சின்னத்துக்கு ஓட்டு கேட்ட சிந்தியா என அவரது பிரசார வீடியோவை வைரலாக்கி ஷேர் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+