பிரசார் பாரதி அமைப்பின் பகுதி நேர உறுப்பினராக பாலிவுட் நடிகை, கஜோல் நியமனம்
டெல்லி: பிரசார் பாரதி அமைப்பின் பகுதி நேர உறுப்பினராக, பிரபல பாலிவுட் நடிகை, கஜோல் நியமிக்கப்பட்டு உள்ளார். 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை சுமார் 5 ஆண்டுகள் கஜோல் இந்த பதவியில் இருப்பார்.
பாலிவுட் நடிகை கஜோல், தில்வாலே துல்கனியா லே ஜாயங்கே படம் மூலம் பிரபலமானவர். தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்து தமிழக ரசிகர்களின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்தார்.

திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆனாலும் தற்போது சினிமா, விளம்பரங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் பிரசார் பாரதி அமைப்பின் பகுதி நேர உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் துார்தர்ஷன், 'டிவி' சேனல், அகில இந்திய வானொலி போன்றவை, பிரசார் பாரதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன;
வாரியத்தின் தலைவராக சூர்ய பிரகாஷ் உள்ளார்.
இந்த வாரியத்தில், பகுதி நேர உறுப்பினர்களாக, ஆறு பேர் செயல்படலாம். அதில், இரண்டு உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. அந்தப் பதவிகளுக்கு, பிரபல இந்தி நடிகை கஜோலும், ஆன்லைன் மீடியா நிறுவனத்தை சேர்ந்த ஷசி சேகர் வேம்பட்டி என்பவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத், மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறைச் செயலர் பிமல் ஜுல்கா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழுவானது கஜோல் மற்றும் வெம்பதியை தேர்வு செய்தது.
பிப்ரவரி 24ம் தேதி நடைபெறும் பிரசார் பாரதி வாரிய கூட்டத்தில் நடிகை கஜோல் கலந்து கொள்வார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தூர்தர்ஷன் மற்றும் அகில் இந்திய வானொலி நிலையம் ஆகியவற்றின் பொதுமேலாளர்கள் நியமனம் தொடர்பாக இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications