அண்ணனை போன்று நடிகர் கலாபவன் மணியும் தற்கொலை செய்து கொண்டாரா?
திருச்சூர்: நடிகர் கலாபவன் மணி தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. முன்னதாக அவரது அண்ணன் வேலாயுதன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ டிரைவராக இருந்து மலையாள திரையுலகில் நுழைந்தவர் கலாபவன் மணி. கல்லீரல் பிரச்சனையால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார்.
அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தது மலையாள திரையுலகினர் பெரும்பாலானோருக்கு தெரியாதாம்.

புகார்
கலாபவன் மணியின் மரணம் இயற்கை அல்ல என்று அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அவர்களின் சொந்த ஊரான சாலக்குடியில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணி தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அண்ணன்
கலாபவன் மணியின் அண்ணன் வேலாயுதன்(51) சாலக்குடியில் உள்ள அவரது வீட்டில் எரிந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மணி
குடிப்பழக்கம் உள்ள கலாபவன் மணி அண்மையில் உடல் எடை வெகுவாக குறைந்து மெலிந்து காணப்பட்டுள்ளார். மேலும் படப்பிடிப்புக்கு வரும்போது எல்லாம் மிகவும் சோர்வாக இருந்துள்ளார்.

சிரிப்பு
என்ன மணி திடீர் என்று இப்படி ஒல்லியாகிவிட்டீர்கள். எப்பொழுது பார்த்தாலும் சோர்ந்து காணப்படுகிறீர்கள் என்று சக நடிகர்கள் கேட்டதற்கு நான் டயட்டில் உள்ளேன் அதான் ஒல்லியாகிவிட்டேன். நான் சோர்வாக எல்லாம் இல்லையே என்று கூறி சிரித்துள்ளார்.

அதிர்ச்சி
கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்து மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது. அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை என்று நடிகர், நடிகைகள் தெரிவித்துள்ளனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications