• search

ரஜினி, கமல் படங்களை கர்நாடகாவில் திரையிட கூடாது.. வாட்டாள் நாகராஜ் கொக்கரிப்பு

By Veera Kumar
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    பெங்களூர்: நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட விட கூடாது என கன்னட சலுவளி வாட்டாள் கட்சி என்ற கர்நாடக மாநில கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

    காவிரி நதிநீர் பிரச்சினையில் இருவருமே கர்நாடகாவிற்கு எதிரான நிலைப்பாட்டை பேசியதாக குற்றம்சாட்டி நாகராஜ் இவ்வாறு அழைப்புவிடுத்தார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடப்பதால் கோபமடைந்துள்ளன கன்னட அமைப்புகள். ஒசூர் அருகேயுள்ள கர்நாடக எல்லைப் பகுதியான அத்திபெலேயில் இன்று, கன்னட அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    தமிழகத்திற்கு எதிராக கோஷம்

    தமிழகத்திற்கு எதிராக கோஷம்

    இதில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட பல்வேறு கன்னட அமைப்பு தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்று, தமிழகத்திற்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து தமிழகம் நோக்கி நடை பயணம் செல்ல தொடங்கிய அவர்களை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.

    நியாயம் கொஞ்சம் கிடைத்துள்ளது

    நியாயம் கொஞ்சம் கிடைத்துள்ளது

    இதன்பிறகு கூட்டத்தினரிடையே பேசிய வாட்டாள் நாகராஜ் "காவிரி நீர் பங்கீட்டில் கர்நாடகாவுக்கு தொடர்ந்து அநியாயம் இழைக்கப்பட்டு வருகிறது. இப்போதுதான், உச்சநீதிமன்ற தீர்ப்பால் சிறிது நியாயம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகாவிற்கு மீண்டும் பெருத்த அநியாயம் நிகழும். கர்நாடக அணை கட்டுப்பாடுகள் முழுக்க மத்திய அரசிடம் சென்றுவிடும்.

    இதுவரை பேசவில்லை

    இதுவரை பேசவில்லை

    தமிழக அரசு அரசியலுக்காக காவிரியை வைத்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றோர், காவிரி விவகாரத்தில் இதுவரை கருத்து கூறியதில்லை. ஆனால், இப்போது தங்கள் அரசியல் லாபத்திற்காக காவிரி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இவ்விரு நடிகர்களின் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க கூடாது.

    நாங்க பெருசா போராடுவோம்

    நாங்க பெருசா போராடுவோம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயன்றால், நாமும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும். தமிழக போராட்டத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டி வரும். தமிழகத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் நகைப்புக்குரியது. தமிழகத்திற்கு காவிரி விவகாரத்தில் அநியாயம் ஆகவில்லை. கர்நாடகாவுக்குதான் அநியாயம் ஆகியுள்ளது. இவ்வாறு வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

    பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

    English summary
    Vattal Nagaraj urged actors Kamal Haasan and Rajinikanth films not to be screened in Karnataka.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more