For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருப்பு சிவப்பு உடையில் கலக்கலாக கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழி!

2ஜி வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதற்காக இன்று கனிமொழி கருப்பு சிவப்பு உடையில் வந்து இருந்தார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கருப்பு சிவப்பு உடையில் கலக்கிய கனிமொழி!- வீடியோ

    டெல்லி: 2ஜி வழக்கு டெல்லியில் இருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருந்தது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக இன்று கனிமொழி நீதிமன்றதிற்கு வந்து இருந்தார்.

    இன்று தீர்ப்பு நாள் என்பதால் அந்த பகுதியே மிகவும் பரபரப்பாக இருந்தது. என்ன மாதிரியான தீர்ப்பு வெளியாகும் என்று இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது.

    இத்தனை களேபரங்களுக்கும் மத்தியிலும் கனிமொழி அணிந்திருந்த புடவை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கருப்பு சிவப்பு கலரில் இருக்கும் அவரது புகைபடம் வைரல் ஆகி இருக்கிறது.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    பல வருடங்களாக இந்தியாவே காத்திருந்த 2ஜி வழக்கிற்கு இன்றுதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றச்சாட்டப்பட்டு இருந்த கனிமொழி, ராசா உட்பட 14 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த 14 பேருக்கும் எதிராக சரியான ஆதாரம் தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்தார்.

    கருப்பும் சிவப்பும்

    கருப்பும் சிவப்பும்

    தீர்ப்பு நாளுக்காக கனிமொழி காலையிலேயே நீதிமன்ற வளாகத்தில் ஆஜராக இருந்தார். நீதிமன்றத்திற்கு அவர் இந்த முறை கருப்பு சிவப்பு ஆடையில் வந்து இருந்தார். திமுக கட்சி கோடி போலவே இருந்த அந்த புடவை அனைவரது கண்களையும் கவர்ந்தது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    எப்போதும் நீதிமன்றத்திற்கு சோகமான முகத்துடனே கனிமொழி வருவது வழக்கம். ஆனால் தீர்ப்பிற்கு முன்பே அவர் முகத்தில் ஒரு பொலிவு காணப்பட்டது. மேலும் தீர்ப்பிற்கு பின் வெளியே வந்த அவர் மிகவும் மகிழ்சியாக இருந்தார். பல வருட வழக்கு முடிந்த திருப்தி அவர் முகத்தில் காணப்பட்டது.

    எப்போதும் போல் இல்லை

    எப்போதும் போல் இல்லை

    கருப்பு சிவப்பு உடையில் தொடங்கி அவரது பழக்க வழக்கங்களும் இந்த முறை வித்தியாசமாக இருந்தது. இத்தனை வருடம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கனிமொழி போல் இல்லாமல் மிகவும் சந்தோசமாகவும், நம்பிக்கையுடனும் காணப்பட்டார். வழக்கில் வெற்றி பெற்று அவர் கருப்பு சிவப்பு உடையுடன் வந்ததை தொண்டர்கள் சந்தோசமாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

    English summary
    Delhi CBI court released all 14 who were accused in 2 G spetrum case. Kanimozhi came in red and black saree to the court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X