40 லட்சம் போலி வாக்காளர்கள்... தலைமை தேர்தல் ஆணையரிடம் கனிமொழி புகார்
டெல்லி: தமிழகத்தில் 40 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் திமுக எம்பி கனிமொழி புகார் மனு அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி உள்ளதாகவும் பல லட்சம் போலிவாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் திமுக தலைவர் கருணாநிதி விரிவான அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை இன்று திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அதில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஆளும் கட்சியினர் தலையீடு இருந்தது. 22% வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக வாக்காளர் பட்டியலில் 40 லட்சம் போலி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிடுகின்றனர்.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் விவரித்துள்ளேன். அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications