தாய்மார்களை குழந்தை பெற்றுத் தரும் மெஷின்களாக பார்க்காதீர்கள் - கனிமொழி ஆவேசம்
டெல்லி: தாய்மார்களை குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாகப் பார்க்காதீர்கள் என திமுகவின் மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை குழுத் தலைவருமான கனிமொழி ஆவேசமாக கூறினார்.
தனியார் நிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 3 மாத மகப்பேறு விடுப்பை 6 மாதங்களாக அதிகரிக்க வகை செய்யும் மகப்பேறு ஆதாய சட்டத் திருத்த மசோதா வியாழக்கிழமை ராஜ்யசபாவில் கொண்டுவரப்பட்டது.

இந்த திருத்த மசோதாவில் குழந்தை பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை ஆறு மாதமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கருத்தரிக்க வாய்ப்பில்லாத பெண்களுக்காக. தங்களது கருவில் குழந்தையைத் சுமந்து பெற்றுத் தரும் தாய்மார்களுக்கு இந்த ஆறுமாத விடுமுறை இல்லை என்றும், 15 முதல் 20 நாள் வரையிலான சாதாரண விடுமுறைதான் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் பேசிய கனிமொழி, பெண்களை குழந்தை பெறும் இயந்திரமாகப் பார்க்காதீர்கள். பெற்ற குழந்தையோடு இருந்தால்தான் அந்தத் தாய்க்கு மகப்பேறு விடுப்பு என்பது நியாயமானதாக இல்லை. குழந்தை பெறுதல் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு போலாகும்.
பிரசவம் ஆன தாய்மார்கள் அனைவரும் மீண்டும் ஆரோக்கியமான உடல் நலம் பெற ஓய்வு தேவை. எனவே, அனைத்து வித தாய்மார்களுக்கும் ஒரே மாதிரியான விடுப்பு என்றே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் கனிமொழியின் பேச்சிற்கு பதிலளித்த மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், 'மற்றவர்களுக்காக தங்கள் கருவில் குழந்தைகளை சுமந்து பிரசவிக்கும் பெண்கள் குழந்தை பெற்ற பிறகு குழந்தையுடனே இருப்பதில்லை. அதனால் அவர்கள் இந்த மகப்பேறு விடுமுறை சலுகைக்குள் வரமாட்டார்கள்' என்று தெரிவித்தார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications