300 முறை போலீசை சுட்ட ரவுடி விகாஷ் துபேவின் ஆட்கள்.. வீட்டின் பதுங்கு குழியில் ஏராளமான ஆயுதங்கள்
கான்பூர்: டிஎஸ்பி, 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 8 போலீசாரை சுட்டுக்கொன்ற பிரபல தாதா விகாஷ் துபேவின் இல்லத்தில் பதுங்கு குழி இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் பிரபல தாதா விகாஷ் துபே. இவரை மீது கொலை, கொலை முயற்சி, உள்பட 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளது.

விகாஸ் துபேபை உத்தரப்பிரதேச போலீசார் நீண்ட காலமாக தேடிவந்தனர். தலைமறைவாக வாழ்ந்து வரும் இவன் கான்பூரின் துபே கிராமத்தில பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வியாழக்கிழமை இரவு டிஸ்பி தலைமையில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 12க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு விரைந்தனர்.
அப்போது போலீஸ் வருதை முன்கூட்டியஅறிந்திருந்த விகாஷ் துபே மற்றும் அவனது ஆட்கள் மொட்டை மாடியில் ஏறி நின்று கொண்டனர். ஜேசிபிஐ நடுவழியில் நிறுத்தி அவர்களை மடக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் டிஎஸ்பி, 2 சப்இன்ஸ்பெக்டர்கள் உள்பட 8 காவலர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 4 காவலர்கள் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு தாதா விகாஷ் துபே மற்றும் அவனது ஆட்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த ரவுடி கூட்டத்தை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே கான்பூரின் பித்தூர் பகுதியில் உள்ள ரவுடி விகாஷ் துபேவின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கு பதுங்கு குழிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் வீட்டில் இருப்பதையும் கான்பூர் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என்று கான்பூர் ஐ.ஜி. மோஹித் அகர்வால் பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
காவல்துறையினரை 200-300 முறை குற்றவாளிகள் சுட்டிருக்கிறார்கள். அவற்றின் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளது. விகாஸ் துபே மற்றும் அவரது உதவியாளர்களால் ஐந்து போலீசாரின் ஆயுதங்களும் சூறையாடப்பட்டுள்ளன. ஏ.கே .47, இன்சாஸ் துப்பாக்கி மற்றும் மூன்று கைத்துப்பாக்கிகளை போலீசாரிடம் பறித்துள்ளனர். இதில் ஒரு துபாக்கியை இதுவரை மட்டும் மீட்டுள்ளனர்.இதனடையே விகாஷ் துபேவின் வீட்டை ஜேசிபியை வைத்து இடித்து தரைமட்டம் ஆக்கினர். இந்த ஜேசிபியை வைத்து தான் போலீஸை மடக்கியிருந்தான் விகாஷ் துபே. அதே ஜேசிபியால் வீடு அழிக்கப்பட்டது. அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications