மதச்சார்பின்மை அணி.. முலாயம்சிங் - பிரகாஷ் காரத் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத் நேற்று சந்தித்துப் பேசினார்.
குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் பதவியிழப்பதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்தால் எழுந்த சர்ச்சை தொடர்பாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க ஒரு தேசிய மாநாடு நடத்துவது குறித்து முக்கியமாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த சில வாரங்களில் பிரகாஷ் காரத், முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கிடையே நடைபெறும் 2-வது சந்திப்பு இது.












Click it and Unblock the Notifications