யாரைப் போய் வம்பிக்கிழுக்கிறார் பாருங்க இந்த கர்நாடகத்து புகழேந்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சசிகலா குறித்து பொய்யான குற்ற்ச்சாட்டு எழுப்பிய கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா அரசியலுக்கு வரட்டும். அவரை எதிர்த்து போட்டியிடத் தயார் என கர்நாடக அதிமுக நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார்.

பெங்களூரு பரபப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு 5 அறைகள், குக்கர், வாஷிங் மெஷின் என பல சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதை முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்.

மேலும், இந்த வசதிகளை செய்துகொடுக்க முன்னாள் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணராவ் ரூபாய் 2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் ரூபா குற்றம் சாட்டினார். இது பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிரடி இடமாற்றம்

அதிரடி இடமாற்றம்

அதனைத் தொடர்ந்து டிஜிபி சத்திய நாராயண ராவ், டிஐஜி ரூபா மற்றும் சில சிறைத்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். மேலும், அங்கு புதிய அதிகாரிகளை கர்நாடக அரசு நியமித்தது.

கர்நாடகத்து புகழேந்தி

கர்நாடகத்து புகழேந்தி

ஆனால், சசிகலா ஆதரவாளரான புகழேந்தி சிறையில் சசிகலாவுக்கு எந்த வசதியும் செய்துகொடுக்கப்படவில்லை என தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில், டிஐஜி ரூபா மீது அதிமுக அம்மா அணி சார்பில் மனநஷ்ட வழக்கு போடப்படும் என்று கூறியுள்ளரா்.

அரசியலுக்கு வாங்க மோதலாம்

அரசியலுக்கு வாங்க மோதலாம்

அவரை வேறு துறைக்கு மாற்றிய பின்பும் சசிகலா குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். அது சரியல்ல. வேண்டுமானால் ரூபா, அரசியலுக்கு வரட்டும். அவரை எதிர்த்து போட்டியிட தயார் என சவால் விட்டுள்ளார்.

தேவையா இது

தேவையா இது

கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருப்பவர்தான் இந்த புகழேந்தி. ஆனால் சமீப காலமாக தினகரன் பின்னாலேயே போய்க் கொண்டிருக்கிறார். தமிழகத்தில்தான் அதிக நாட்களைக் கழிக்கிறார். இப்போது கர்நாடக டிஐஜியை வம்பிக்கிழுத்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If DIG Roopa come to politics we are ready contest against her told Karnataka Admk leader Pugalenthi.
Please Wait while comments are loading...