தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதே நல்லது.. கர்நாடக அட்வகேட் ஜெனரல் யோசனை
பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு செப்டம்பர் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி வீதம் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்தது கர்நாடக அரசு. மேலும் சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி காவிரி நீர், குடிநீருக்கு மட்டும்தான் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது கர்நாடகா.
இதனிடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசின் தீர்மானங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டுப்படுத்தாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தமிழகத்திற்கு 27ந் தேதி முதல் முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு தலா 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு, விதானசவுதாவில் கர்நாடக மாநில அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
கர்நாடக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வக்கீல்கள் ரகுபதி, மோகன் கத்தார்கி உள்ளிட்ட சட்ட வல்லுநர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது மதுசூதன் நாயக் தனது கருத்தை தெரிவிக்கையில், காவிரி நதிநீரின் நான்கு அணைக்கட்டுகளிலும் மொத்தம் 27.6 டிஎம்சி தண்ணீர் உள்ளது. சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி அடுத்த 3 நாட்களுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு விடுவித்தாலும் குடிக்க போதிய நீர் இருக்கும். எனவே உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மரியாதை கொடுத்து நீரை திறந்துவிட வேண்டும் என்றார். இவ்வாறு விடுவித்தால் உச்சநீதிமன்ற கோபத்தில் இருந்து தப்பலாம் என்பது, மதுசூதன் நாயக் கருத்து. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது மழை பெய்துவருவதையும் மதுசூதன் நாயக் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இதை பாஜக, ம.ஜ.த உறுப்பினர்கள் ஏற்கவில்லை. அட்வகேட் ஜெனரல் கூறியபடியெல்லாம் முடிவெடுக்க முடியாது. அரசு எடுக்கும் முடிவை சுப்ரீம் கோர்ட்டில் திறம்பட எடுத்துச் சொல்ல யோசனை தெரிவித்தால் போதும் என்று கூறியுள்ளனர். இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications