ஜெ. விடுதலையை எதிர்க்கும் அப்பீல் வழக்கில் ஆஜராக கூடுதல் அரசு வழக்கறிஞரை நியமித்தது கர்நாடகா
பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஆஜராக துஷ்யந்த் தவேவை கூடுதல் அரசு வழக்கறிஞராக கர்நாடகா அரசு நியமித்துள்ளது.
1991-96ஆம் ஆண்டு முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்தார் என வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதத்தையும் அவர் விதித்தார். இதனால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது.
இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிபெஞ்ச் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். இதனிடையே ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இருதரப்பும் தங்களது தரப்பு பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு 8 வார காலத்துக்கு ஒத்திவைத்தது. இருதரப்பும் தங்களது பதில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 12-ந் தேதிக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆஜராகிவருகிறார். அவருக்கு உதவியாக கர்நாடக அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், உதவி அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா ஆகியோரும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் கூடுதல் அரசு வழக்கறிஞராக துஷ்யந்த் தவேவை நியமிக்க வேண்டும் என்று கர்நாடகா அரசிடம் பி.வி. ஆச்சார்யா கோரியிருந்தார். இதை கர்நாடகா அரசும் ஏற்று டெல்லியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவை கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா அரசு நியமித்திருக்கும் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எதிராக வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications