2011 ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரம் எங்கே? 50% உச்சவரம்பை நீக்குக-கர்நாடகாவில் ராகுல் சமூகநீதி வாய்ஸ்
கோலார்: 2011-ம் ஆண்டு மத்திய அரசு நடத்திய ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பகிரங்கப்படுத்த வேண்டும்; இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பாக 50% என்பதை நீக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டன. கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையே மும்முனைப் போட்டி பிரதான போட்டியாக உள்ளது. ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்கி உள்ளன. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி நேற்று பிரசாரம் செய்தார். இதே கோலாரில்தான் 2019-ம் ஆண்டு ராகுல் காந்தி லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்த போது பிரதமர் மோடி குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். இந்த விமர்சனங்களுக்காக அவதூறு வழக்கு தொடரப்பட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குஜராத் சூரத் நீதிமன்றம்.
2 ஆண்டு சிறை தண்டை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து குஜராத் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இம்மேல்முறையீட்டு மனு மீது ஏப்ரல் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இப்பின்னணியில் கோலாரில் நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 2011-ம் ஆண்டு மத்திய அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும். மத்திய அரசுப் பணியில் 7% மட்டும்தான் ஓபிசி சமூகத்தினர் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
இடஒதுக்கீடு விவகாரங்களில் 50% உச்சவரம்பை உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இந்த 50% உச்சவரம்புதான் பல்வேறு மாநிலங்களின் இடஒதுக்கீடுகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. இதனை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுகக் வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications