சட்டசபைல என்ன நடந்தாலும் ரியாக்ட் பண்ணாதீங்க.. காங்., மஜத எம்எல்ஏக்களுக்கு தலைமை கட்டுப்பாடு
சட்டசபையில் என்ன நடந்தாலும் கடைசி வரை அமைதி காக்க வேண்டும், சண்டையில் ஈடுபட கூடாது என்று காங்., ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களுக்கு அவர்களின் கட்சி அறிவுறுத்தி உள்ளது.
பெங்களூர்: சட்டசபையில் என்ன நடந்தாலும் கடைசி வரை அமைதி காக்க வேண்டும், சண்டையில் ஈடுபட கூடாது என்று காங்., ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களுக்கு அவர்களின் கட்சி அறிவுறுத்தி உள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.

இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.
இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில் தற்போது சட்டசபையில் எம்எல்ஏக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எம்எல்ஏக்கள், வரிசையாக பத்து பத்து பேராக அமர வைக்கப்படுவார்கள். பின் அவர்கள் கைதூக்கி வாக்களிப்பார்கள்.
இதில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அந்த கட்சி, அறிவுறுத்தி உள்ளது. பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டாலும் அமைதியாக இருக்க காங்., ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தல். பாஜக எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கைகளுக்கு பதில் தரும் வகையில் நடக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டசபையில் என்ன நடந்தாலும் கடைசி வரை அமைதி காக்க வேண்டும், சண்டையில் ஈடுபட கூடாது என்று காங்., ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களுக்கு அவர்களின் கட்சி அறிவுறுத்தி உள்ளது.
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications