நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த கூடாது.. பாஜகவிற்கு மேலும் பின்னடைவு
நாளை கர்நாடகா சட்டசபையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த கூடாது என்று நீதிபதிகள் அடுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Recommended Video

டெல்லி: நாளை கர்நாடகா சட்டசபையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த கூடாது என்று நீதிபதிகள் அடுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடந்து முடிந்துள்ளது. நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணை நடத்தியது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இக்கடிதங்களை பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி இன்று தாக்கல் செய்தார். எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். முக்கியமாக, இந்த பாஜக கட்சிதான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், எடியூரப்பா எந்த அடிப்படையில் ஆட்சி அமைத்தார் என்று நிரூபிக்க வேண்டும் என்றுள்ளனர்.
இதனால் நாளை 4 மணிக்கு எடியூரப்பா தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இந்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த கூடாது என்று நீதிபதிகள் அடுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். வெளிப்படையாக மட்டும் இந்த வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் நாளை எம்எல்ஏக்கள் கைகளை தூக்கி வாக்குகளை அளிக்க வேண்டும்.
இது எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு வாக்களிப்பதை தடுக்கும். அதேபோல் இதனால் கட்சி தாவல் தடை சட்டம் மூலம் வேறு கட்சிக்கு வாக்களிக்கும் எம்எல்ஏக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். இது பாஜக கட்சிக்கு பின்னடைவையும், மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications