கர்நாடகா பந்த்... மைசூர், மாண்டியா மட்டுமல்ல பெங்களூருவையும் முடக்கும் கன்னட அமைப்புகள் #cauvery
பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதைக் கண்டித்து நாளை மறுநாள் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றியடைய செய்வதில் கன்னட அமைப்புகள் மும்முரமாக உள்ளன.
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக நாளை மறுநாள் கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

பதற்றம் தொடருகிறது
உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மைசூரு, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டினாவில் போராட்டங்கள் தொடர்கின்றன. எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.

கடும் கோபத்தில்...
இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டுள்ளது. இது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னட அமைப்புகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

முடங்கிய மாண்டியா
இதனிடையே நாளை மறுநாள் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிப் பெறச் செய்வதில் கன்னட அமைப்பினர் மும்முரமாக உள்ளனர். ஏற்கனவே மைசூரு, மாண்டியா பகுதிகளில் இயல்பு நிலை கடந்த 3 நாட்களாக முடங்கிவிட்டது. பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையே போர்க்களமாக இருக்கிறது.

முடங்கும் பெங்களூரு
தற்போது பெங்களூரு நகரையும் முழுமையாக முடக்குவதில் முனைப்பு காட்டுகின்றன கன்னட அமைப்புகள். குறிப்பாக நாளை மறுநாள் பந்த நடைபெறும் போது பெங்களூருவில் அனைத்து கடைகள், கல்வி நிறுவனங்களை மூட கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் மைசூர், மாண்டியா மட்டுமின்றி பெங்களூருவும் கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. அதே நேரத்தில் வட கர்நாடகாவில் அவ்வளவாக பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

வாகனங்களுக்கு தடை
எல்லைகளில் தமிழக பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கர்நாடகா அரசு பேருந்துகள், தமிழகத்துக்கு இயக்கப்பட்டு வருகின்றன. நாளை மறுநாள் முழு அடைப்பின் போது எல்லைகளை மூடி எந்த ஒருவாகனத்தையும் அனுமதிக்கக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளன கன்னட அமைப்புகள்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications