பிரகாஷ் ராஜ் தனது இமேஜை கெடுத்துக் கொண்டார்.. கர்நாடக பாஜக கடும் கண்டனம்
பெங்களூர்: அநியாயங்களை கண்டும், காணாததை போல இருக்கும் பிரதமர் மோடி தன்னைவிட சிறந்த நடிகர் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்ததற்கு கர்நாடக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்குமார், ஷோபா கரந்தலாஜே ஆகியோர் கூட்டாக இன்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது ஷோபா கூறுகையில், "பிரதமர் மோடி பற்றி விமர்சனம் செய்தால், ஒரே ராத்திரியில் நாடு முழுக்க பிரபலமாகிவிடலாம் என்று சிலர் கருதுகிறார்கள். மோடியை விமர்சனம் செய்ததன் மூலம், பிரகாஷ் ராஜ் தனது மீதான மதிப்புக்கு தானே கரி பூசிக்கொண்டுள்ளார்.

கடந்த மூன்றரை வருட காலத்தில் எந்த ஒரு ஊழல் புகாரும் இல்லாமல் மத்திய அரசை திறம்பட நடத்தி வருபவர் மோடி. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், உலக அரங்கில் இந்தியா தலைகுனிவை சந்தித்தது. காரணம், எங்கும், எதிலும் ஊழல் வியாபித்திருந்தது. இந்தியாவை தலைநிமிரச் செய்த பெருமை மோடியையே சேரும்.

மோடியை ஒருவர் விமர்சனம் செய்துவிட்டதாலேயே அவரது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிடாது. நாட்டின் நலனுக்காக ஓயாது பாடுபடுபவர் மோடி. பிரகாஷ் ராஜ் இப்படி பேசியது சரியில்லை என்றார்.
சுரேஷ் குமார் கூறுகையில், பிரகாஷ் ராஜ் ஒரு சிறந்த நடிகர். எனவேதான், பொது நிகழ்ச்சி மேடையை சினிமா என நினைத்து பயன்படுத்தியிருப்பார் என்று கிண்டலாக குறிப்பிட்டார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications