கர்நாடக அரசுக்கு மக்கள் மீது எவ்வளவு கருணை.. தமிழக அரசுக்கு மனசு வருமா?
தற்போது கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: தற்போது கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
தற்போது சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.00 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 6 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

எப்படி குறைக்கலாம்
இந்த பெட்ரோல் விலை எப்போதும் 5 முக்கிய காரணிகளை கருத்தில் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலை, பெட்ரோலை பெட்ரோல் பங்குகளுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு, மத்திய அரசு நம்மிடம் வாங்கும் வரி, மாநில அரசு நம்மிடம் வாங்கும் வரி. எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கும் டீலருக்கு அளிக்கப்படும் பணம், இதில் அரசு வாங்கும் வரியை குறித்து விலையை குறைக்கலாம்.

மூன்று மாநில பெட்ரோல் விலை
முதலில் தெலுங்கானாவில்தான் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று கூறப்பட்டது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை, உச்சத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தது.
|
கர்நாடகா முடிவு
இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். இதனால் அங்கு பெட்ரோல் விலை 81 ரூபாய்க்கு விற்கப்பட வாய்ப்புள்ளது. கர்நாடக அரசு மாநில வாட் வரிகளில் இருந்து 2 ரூபாயை குறைத்துள்ளது.

எதிர்பார்ப்பு
கர்நாடகாவில் நிறைய தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் இதனால் சந்தோசம் அடைந்து உள்ளனர். இது தற்போது தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலும் வாட் வரியை இந்த அரசு குறைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications