For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15 ரூபாய் டிக்கெட் வாங்கி பஸ்சில் பயணித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா - வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பேருந்தில் பயணம் செய்த கர்நாடக முதல்வர்-வீடியோ

    பெலகாவி: கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.15க்கு டிக்கெட் பெற்று பஸ்சில் பயணித்தார் என்றால் நம்ப முடிகிறதா. உண்மைதான்.

    கர்நாடக சட்டசபை குளிர் கால கூட்டத்தொடர், பெலகாவியிலுள்ள (பழைய பெயர் பெல்காம்) சுவர்ண சவுதா கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. எனவே முதல்வர் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் பெலகாவியில் முகாமிட்டுள்ளனர்.

    Karnataka CM's takes the bus to promote public transport, buys Rs 15 ticket

    இந்த நிலையில் திங்களன்று, பெங்களூரிலிருந்து விமானத்தில் பெலகாவி சென்ற முதல்வர் சித்தராமையா, அங்கிருந்து சுவர்ண சவுதா கட்டிடத்திற்கு பஸ்சில் பயணிக்க முடிவு செய்தார். அவருடன் சில அமைச்சர்களும் பஸ்சில் பயணித்தனர்.

    ஏசி வசதி இல்லாத சாதாரண பேருந்தில் அவர் பயணித்தார். 15 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினார். சக அமைச்சர்களுக்கும் டிக்கெட் வாங்கி கொடுத்தார். மாதந்தோறும் ஒருநாளை பஸ் தினம் என கர்நாடக அரசு கொண்டாடுவது வழக்கம். அன்றைய நாட்களில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என உயர் மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் பஸ்சில் மக்களோடு பயணிப்பார்கள். மக்கள் கார், பைக்குகளை தவிர்த்து, பஸ் பயணத்தை மேற்கொள்ள, ஊக்கப்படுத்துவது இதன் நோக்கம்.

    நேற்றும் அதேபோன்ற ஒரு பஸ் தினமாகும். இதையொட்டி முதல்வர் பஸ்சில் பயணித்துள்ளார்.

    English summary
    Karnataka Chief Minister Siddaramaiah led by example on Monday when he hopped on to a bus to encourage public transport. While the bus was specially arranged for Siddaramaiah and his ministers, the Congress leader bought a ticket worth Rs 15 for the ride.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X