கண் தானம் செய்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா..!
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது கண்களை தானம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
கன்னட நடிகர் ராஜ்குமாரின் நினைவு மண்டப திறப்பு விழா பெங்களூருவில் இன்று நடைபெற்றது. அதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பல விஐபிகள் பங்கேற்றனர்.

நடிகர் ராஜ்குமார் கண்தானம் செய்யுமாறு தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டவர். அவரும் தானம் செய்தவர். ராஜ்குமார் மரணத்திற்கு பிறகு அவரது கண்கள், பார்வையிழந்த வேறு ஒரு நபருக்கு பொருத்தப்பட்டன. கர்நாடகாவில், இதுவரை, ராஜ்குமாரின் ரசிகர்கள் 90 ஆயிரம் பேர் கண்தானம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

நடிகர் ராஜ்குமாரைப்போலவே, முதல்வர் சித்தராமையா தனது கண்களையும் தானம் செய்ய முன்வந்து அதற்கான அறிவிப்பை ராஜ்குமார் நினைவு மண்டப திறப்பு விழாவிலேயே அறிவித்தார். மேலும், கண் தானம் செய்வது தொடர்பான ஆவணங்களிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். கர்நாடக முதல்வரின் இந்த செயலால் மாநிலம் தழுவிய அளவில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications