கர்நாடகா முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்றனர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார் இன்று பதவியேற்றனர். மேலும் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்த்தார். இப்பதவியேற்பு விழாவில் தமிழாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கர்நாடகா முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வின் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்.

 Karnataka CM Swearing in Ceremony LIVE: Siddaramaiah & DK Shivakumar Oath Taking and News Highlights

May 20, 2023, 1:40 pm IST

கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

ஜப்பான் செல்லும்போதெல்லாம் பிரதமர் மோடி ரூபாய் நோட்டுகளை தடை செய்கிறார் - கார்கே

அன்று ஜப்பான் சென்றபோது ரூ.1000 நோட்டை தடை செய்தார் - கார்கே

இன்று ஜப்பான் சென்ற நிலையில் ரூ.2000 நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார் - கார்கே

காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளும் கூறியபடி மக்களுக்காக செயல்படுத்தப்படும் - கார்கே
May 20, 2023, 1:36 pm IST

கர்நாடகாவில் காங்கிரஸ் வழங்கிய 5 வாக்குறுதிகளுக்கும் இன்றே அமைச்சரவை ஒப்புதல் வழங்கும்- ராகுல் காந்தி

பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிதியுதவி
May 20, 2023, 1:35 pm IST

கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பேச்சு

ஊழல் அரசியல் செய்தவர்களை தோற்கடித்துள்ளனர் - ராகுல் காந்தி

வெறுப்பு அரசியலை தோற்கடித்துள்ளனர் - ராகுல் காந்தி

நாங்கள் 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்தோம் - ராகுல் காந்தி

5 வாக்குறுதிகளும் முதல் அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு சட்டப்படி செயல்படுத்தப்படும் - ராகுல்

காங்கிரஸ் ஊழல் இல்லாத அரசை வழங்கும் என உறுதியளிக்கிறோம் - ராகுல்
May 20, 2023, 1:25 pm IST

விழாவில் ராகுல் காந்தி பேச்சு
May 20, 2023, 1:23 pm IST

கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழா முடிவடைந்ததை தொடர்ந்து தலைவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
May 20, 2023, 1:20 pm IST

விழா மேடையில் இருந்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் புறப்பட்டு சென்றார்.
May 20, 2023, 1:18 pm IST

கர்நாடகா முதல்வர் பதவியேற்வு விழா நிறைவு பெற்றது
May 20, 2023, 12:53 pm IST

கர்நாடகா துணை முதல்வராக டிகே சிவக்குமாருக்கு, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
May 20, 2023, 12:51 pm IST

கர்நாடகா முதல்வராக 2வது முறையாக சித்தராமையா பதவியேற்றார்

கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
May 20, 2023, 12:44 pm IST

கர்நாடகா முதல்வராக 2வது முறையாக சித்தராமையா பதவியேற்றார். கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
May 20, 2023, 12:43 pm IST

கர்நாடகா முதல்வராக சித்தராமையா பதவியேற்கும் விழா துவங்கியது
May 20, 2023, 12:43 pm IST

விழா மேடையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்கள் ஜாலியாக உரையாடினர்.
May 20, 2023, 12:39 pm IST

விழா மேடைக்கு வந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை டிகே சிவக்குமார் ஆரத்தழுவி வரவேற்றார்
May 20, 2023, 12:39 pm IST

விழா மேடைக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வருகை
May 20, 2023, 12:30 pm IST

கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்கும் சித்தராமையா விழா மேடைக்கு வருகை
May 20, 2023, 12:29 pm IST

விழா மேடைக்கு மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வருகை
May 20, 2023, 12:19 pm IST

பதவியேற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன் டிஆர் பாலு எம்பியும் பங்கேற்பு
May 20, 2023, 12:16 pm IST

விழா மேடைக்கு நடிகர் கமல்ஹாசன் வருகை
May 20, 2023, 12:10 pm IST

விழா மேடைக்கு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் வருகை புரிந்தார். ஸ்டாலினை, டிகே சிவக்குமார் வரவேற்றார்.
May 20, 2023, 11:55 am IST

பெங்களூர் தனியார் ஓட்டலில் இருந்து மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ரன்தீப் சுர்ஜேவாலா, கேசி வேணுகோபால் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தனி பஸ்சில் பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்டனர்.
May 20, 2023, 11:55 am IST

பதவியேற்பு விழா மேடைக்கு துணை முதல்வராக பொறுப்பேற்கும் டிகே சிவக்குமார், அமைச்சர்கள் வருகை
May 20, 2023, 11:44 am IST

பெங்களூர் தனியார் ஓட்டலில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ரன்தீப் சுர்ஜேவாலா, சித்தராமையா, டிகே சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை
May 20, 2023, 10:30 am IST

பதவியேற்பு விழாவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பெங்களூர் புறப்பட்டு செல்கிறார்.
May 20, 2023, 8:07 am IST

சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாருடன் 8 பேர் இன்று முதற்கட்டமாக அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். அதன்படி முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் கேஎச் முனியப்பா, முன்னாள் அமைச்சர்களான எம்பி பட்டீல், கேஜே ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டர்கள் அமைச்சர்களாக பதவி பிரமாணம் எடுத்து கொள்கின்றனர். இதில் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ஆவார். இதன்மூலம் இன்று 10 பேர் பதவியேற்க உள்ளனர்.
May 20, 2023, 8:02 am IST

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் பதவியேற்பு விழாவில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
May 20, 2023, 7:29 am IST

கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
May 20, 2023, 7:05 am IST

இன்றைய பதவியேற்பு விழாவின்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாவும் பதவி பிரமாணம் எடுத்து கொள்ள உள்ளனர். சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு 50:50 என பங்கீட்டில் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
May 20, 2023, 7:03 am IST

சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாருக்கு கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
May 20, 2023, 7:02 am IST

கர்நாடகா முதல்வராக இன்று சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணிக்கு பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் நடைபெற உள்ளது.
May 20, 2023, 12:05 am IST

பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு விழாவில் முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+