முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டம் வாபஸ்- கர்நாடகா அமைச்சரவை கூட்டம் அதிரடி முடிவு!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் முந்தைய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெறுவது என முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று அதிரடியாக முடிவு செய்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. கர்நாடகா துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவி வகிக்கிறார்.

கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த கையோடு பெண்களுக்கான இலவச பேருந்து உள்ளிட்ட தேர்தலின் போது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய 5 முக்கிய வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார் முதல்வர் சித்தராமையா. இதனையடுத்து 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவை நடைமுறைக்கு வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய, இந்துத்துவா சார்ந்த நடவடிக்கைகளை கையில் எடுத்திருக்கிறது சித்தராமையா அரசு. பசுவதை தடை சட்டத்தி ல் உரிய திருத்தங்கள் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்ப பெறுவது என இன்று நடைபெற்ற முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல கர்நாடகா பாடப் புத்தகங்களில் ஹெட்கேவர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்கள் பற்றிய பாடங்கள் நீக்கப்படுகின்றன. அதேநேரத்தில் கர்நாடகாவில் அனைத்து அரசு, தனியார் பள்ளி- கல்லூரிகளில் தேசத்தின் அரசியல் சாசனம் கட்டாயம் இடம்பெறுவதற்கான நடவடிக்கையையும் கர்நாடகா காங்கிரஸ் அரசு மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறுகையில், பாடப்புத்தகத்தில் ஹெட்கேவர் குறித்து இடம் பெற்றிருந்து நீக்கப்படுகிறது. பாடப் புத்தகங்களில் முந்தைய பாஜக அரசு என்னவெல்லாம் மாற்றங்களை செய்திருந்ததோ அவை அனைத்துமே நீக்கப்படும் என்றார்.
சித்தராமையா அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடகா மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பிஜி நாகேஷ் கூறுகையில், காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் வாக்குகள் தேவை. சித்தராமையா அரசாங்கம் இந்துக்களுக்கு எதிரானது. ஹிஜாப்பை கூட மீண்டும் சித்தராமையா அரசு அனுமதிக்கக் கூடும். சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக அனைத்தையும் அரசியலாக்குகிறது சித்தராமையா அரசு என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்'












Click it and Unblock the Notifications