கர்நாடகா:பெண்களுக்கு மாதம் ரூ.2000, இலவச பேருந்து பயணம், 200 யூனிட் மின்சாரம்- காங். தேர்தல் அறிக்கை
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏராளமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ. 3,000 நிதி உதவி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், விவசாய கடன் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும் என்பதும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள்.

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள்
- குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்
- அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்
- வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம்
- வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3,000 நிதி உதவி
- டிப்ளமோ பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500
- விவசாய கடன் ரூ3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்
- கர்நாடகாவின் KSRTC,BMTC பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி
- விவசாயிகளுக்கு பகலில் மும்முனை மின்சாரம் 8 மணிநேரம் வழங்கப்படும்
- சொட்டு நீர் பாசனத்துக்கு 100% மானியம் வழங்கப்படும்
- ஆழ்கடல் மீனவர்களுக்கு 500 லிட்டர் வரியில்லா டீசல் வழங்கப்படும்
- 5 ஆண்டுகளில் ரூ12,000 கோடியில் நீல பொருளாதாரம்
- மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ6,000 நிதி உதவி
- பால் மானியம் லிட்டருக்கு ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆக உயர்வு
- மேகதாது அணை கட்ட ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வோம்
- எஸ்சி இடஒதுக்கீடு 15%-ல் இருந்து 17% ஆக உயர்த்துவோம்
- எஸ்டி இடஒதுக்கீடு 3%-ல் இருந்து 7% ஆக உயர்த்துவோம்
- சிறுபான்மையினர் இடஒதுக்கீடு 4% மீண்டும் அமல்படுத்துவோம்
- லிங்காயத், ஒக்கலிகா இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு 9-வது அட்டவணையில் சேர்ப்போம்
- கர்நாடகா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
- மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிப்போம்
- இரவு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மாதம் ரூ. 5,000 சிறப்பு ஊக்கத் தொகை
- தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக கர்நாடகா மாநில கல்வி கொள்கை
- ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் Bharat Jodo சமூக நல்லிணக்க கமிட்டி உருவாக்கப்படும்
- 2006-ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்
- பொதுத்துறை பணிகளில் ஊழல் ஒழிப்பு
- மக்கள் விரோத, நியாயப்படுத்த முடியாத பாஜக அரசின் சட்டங்கள் ஓராண்டுக்குள் விலக்கப்படும்.
- நாள் ஒன்றுக்கு 1.5 கோடி லிட்டர் பால் உற்பத்திக்கு இலக்கு
- 63 எல்லை வட்டாரங்களிலும் கன்னட மொழி, கலாசார மேம்பாட்டுக்கு நடவடிக்கை
#WATCH | Congress releases the party's manifesto for the #KarnatakaElections2023
— ANI (@ANI) May 2, 2023
Party president Mallikarjun Kharge, former Karnataka CM and LoP Siddaramaiah, party state president DK Shivakumar and other leaders are present on the occasion. pic.twitter.com/yMIdCZy0Km
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications