கர்நாடகா: ராமர் கோவில் கொண்டாட்டங்களை அதிர வைத்த தனி ஒரு பெண்ணின் 'அல்லாஹ்ஹூ அக்பர்' முழக்கம்!
ஷிமோகா: கர்நாடகா மாநிலத்தில் ராமர் கோவில் கொண்டாட்டங்களின் போது பெண் ஒருவர் எழுப்பிய அல்லாஹ்ஹூ அக்பர் முழக்கம் ஷிமோகாவை அதிர வைத்தது.
அயோத்தியில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நாட்டின் பெரும் தொழிலதிபர்கள், ஆன்மீகவாதிகள், திரை நட்சத்திரங்கள் என 7,000 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பிரதமர் மோடி, ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து கருவறையில் வழிபாடு நடத்தினார். பின்னர் ராமர் கோவில் வளாகப் பொதுக் கூட்டத்திலும் மோடி உரையாற்றினார்.

ராமர் கோவில் திறப்பு விழாவை நாட்டின் பல பகுதிகளிலும் ராம பக்தர்கள் கொண்டாடினர். கர்நாடகா மாநிலத்திலும் ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சிகள் களைகட்டின. கர்நாடகாவின் ஷிமோகாவில் ஷிவப்பா நாயகா சர்க்கிள் பகுதியில் ராமர் பக்தர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் குழந்தையுடன் சென்ற பெண் ஒருவர் வாகனத்தை நிறுத்தி படம் பிடித்தார். அப்போது போலீசார் அங்கு வந்து இருசக்கர வாகனத்தை அங்கிருந்து நகர்த்துமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனால் அந்த பெண்ணுக்கும் போலீசாருக்கும் இடையே சில நிமிடங்கள் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து அங்கு குவிந்த ராம பக்தர்கள், ஜெய் ஶ்ரீராம் என முழக்கங்களை உரக்க எழுப்பிக் கொண்டே இருந்தனர். அப்போது அப்பெண் திடீரென அல்லாஹ்ஹூ அக்பர் என பதில் முழக்கம் எழுப்ப அந்த இடமே ஒரு நிமிடம் அப்படியே ஆடிப் போனது. பின்னர் அப்பெண் குழந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மண்டியாவில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. அப்போது ஜெய்ஶ்ரீராம் முழக்கங்கள் எழுப்பி கொண்டு தம்மை சூழ்ந்த மாணவர்களுக்கு எதிராக மாணவி முஸ்கன், அல்லாஹ்ஹூ அக்பர் என ஓங்கி முழக்கமிட்ட சம்பவம் நாட்டில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications