கர்நாடக தேர்தல்: பரபரக்கும் தேர்தல் சூதாட்டம்.. 800 கோடி ரூபாய் மார்கெட்.. யாருக்கு வெற்றி!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தேர்தல் சூதாட்டம் நடைபெற்று வருகிறது . பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தேர்தல் சூதாட்டம் நடைபெற்ற

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தேர்தல் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. மிகவும் மறைமுகமாக இந்த சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 225 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.

Karnataka election: Bookies bet on Rs 800 crore as odds are stacked in BJP’s favour

இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக தற்போது சூதாட்டமும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி யார் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க வைத்து சூதாட்டம் செய்கிறார்கள். இந்த மார்க்கெட்டில் மொத்தம் 800 கோடி ரூபாய் புழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் எல்லோரும் பாஜக கட்சிதான் வெற்றிபெறும் என்று பெட்டிங் செய்து இருக்கிறார்கள். அதிக பட்சமாக 11 பேரில் 10 பேர் பாஜக கட்சிதான் வெற்றிபெறும் என்று கூறியுள்ளனர். தொங்கு சட்டசபை உருவாகும் என்று கூறிய பின்பும் பாஜக கட்சிக்குத்தான் பலர் பணம் கட்டி இருக்கிறார்கள்.

அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாதாக அதிக பணம் கட்டியுள்ளனர். 2.5 நபர்களில் 1 நபர் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு பணம் கட்டியுள்ளனர். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 6 பேரில் ஒருவர் பணம் கட்டி இருக்கிறார்கள்.

தேர்தல் நடக்கும் வரை இப்படி பணம் கட்டிக்கொண்டே இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+