தொடரும் பாஜக வெற்றி.. கர்நாடகத்தில் மீண்டும் காவி.. 2 மாநிலங்களோடு சுருங்கியது காங். ஆட்சி!
இந்தியா முழுக்க இருக்கும் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது பாஜக கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
Recommended Video

பெங்களூர்: இந்தியா முழுக்க இருக்கும் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது பாஜக கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. கர்நாடகாவில் வெல்லும் நிலைக்கு வந்துவிட்டது, இதன் மூலம் தென்னிந்தியாவிலும் அழுத்தமாக கால் பதித்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 111க்கும் அதிகமான இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 60+ இடங்களுடன் காங்கிரஸ் பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

ஆட்சி முடிவிற்கு வருகிறது
இதனால் தற்போது சித்தராமையா தலைமையிலான முழுமையான 5 வருட ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. மொத்தமாக அந்த கட்சி 70 இடங்களில் கூட வெற்றிபெற முடியாமல் தோல்வி அடையும் நிலையில் உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்களை பொய்யாக்கி, காங்கிரஸ் மொத்தமாக தோல்வி அடைந்து பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க உள்ளது.

பாஜக கூட்டம்
தற்போது பாஜக உறுப்பினர்கள் கர்நாடகாவில் கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர். இதன் முக்கிய பகுதியாக இன்று பாஜக கட்சியின் தேசிய தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கர்நாடக தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. விரைவில் எடியூரப்பா பதவி ஏற்பு விழாவிற்கான அறிவிப்பு வெளியாகும்.

இரண்டு மாநிலம் மட்டுமே
இந்த தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் துக்ககரமான ஒன்றாகும். ஒருமுறை தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தற்போது வரிசையாக தோற்றுக்கொண்டு இருக்கிறது. வெறும் இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்து வருகிறது. புதுச்சேரி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய பாரதம்
இந்த நிலையில் தற்போது பாஜகவின் அகண்ட பாரத கனவு விரிவடைந்து கொண்டே போகிறது. தென்னிந்தியாவில் மட்டுமே பாஜக வெற்றிபெற முடியாத சூழ்நிலையில் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் கர்நாடகாவில் கால் பதித்து பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. தென்னிந்தியாவில் இரண்டு தெலுங்கு மாநிலங்கள், கேரளா, தமிழகத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் இல்லை, இங்கும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக உழைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications