அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்.. தேர்தலுக்காக கன்னட மொழிபெயர்ப்பு கருவியை பயன்படுத்தும் மோடி
கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி கன்னட மொழிப்பெயர்ப்பு கருவியை பயன்படுத்தி வருகிறார்.
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி கன்னட மொழிப்பெயர்ப்பு கருவியை பயன்படுத்தி வருகிறார். அவர் ஹிந்தியில் பிரச்சாரம் செய்வதை அந்த கருவி மக்களுக்கு கன்னடாவில் ஸ்பீக்கர் மூலம் பேசும்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்று கர்நாடகா வந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். நேற்று வந்த அவர் மொத்தம் 5 நாட்கள் இவர் பிரச்சாரம் செய்வார். 15 இடங்களில் மேடை போட்டு இவர் பேசுவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்யும் மோடி, முதல்முறையாக கன்னட மொழிபெயர்ப்பு கருவியை பயன்படுத்தி இருக்கிறார். நேற்று சந்தேமாரஹள்ளி என்ற இடத்தில் இருந்து மோடி பேசிய எல்லா மேடைகளிலும் அவர் கன்னட மொழிபெயர்ப்பு கருவி மூலம் மட்டுமே பேசினார். இது கன்னட மக்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் ஹிந்தியில் பேசுவதை அந்த மொழிப்பெயர்ப்பு கருவி அப்படியே கன்னடத்தில் மொழிபெயர்த்து ஸ்பீக்கர்கள் மூலம் பேசும். ஆனால் இது நாம் பேசும் அளவிற்கு வேகமாக பேசாது. அதேபோல் மக்களுக்கு, புரியும் வகையில் இது அலங்கார வார்த்தைகளை பயன்படுத்தாது. இதை ராகுல் காந்தி இரண்டு மாதமாக பயன்படுத்தி வருகிறார். அவர் எல்லா தொகுதியிலும் கர்நாடகாவில் இதை வைத்து பேசியுள்ளார்.
ஹிந்தியை திணிக்க நினைக்கும் மத்திய அரசு இப்போது கன்னட மொழிக்காக மொழிபெயர்ப்பு கருவி பயன்படுத்தும் அளவிற்கு இறங்கி வந்து இருப்பது, அங்கு மொழிக்காக தீவிரமாக பாடுபட்டவர்களுக்கு வெற்றி என்று பார்க்கப்படுகிறது. இது மக்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையாக எங்கேயும் மொழிபெயர்ப்பு கருவி பயன்படுத்தாத மோடி, கர்நாடக தேர்தலுக்காக பயன்படுத்தி இருக்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications