For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபெயிலு.. ஃபெயிலு... மோடியின் மத்திய அரசுக்கு ரேங்க் கார்ட் கொடுத்த ராகுல் காந்தி!

மோடியின் மத்திய பாஜக அரசு கர்நாடக மாநிலத்திற்கு என்ன செய்து இருக்கிறது என்று ராகுல் காந்தி டிவிட்டரில் பட்டியலிட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பிரதமர் மோடியின் மத்திய பாஜக அரசு கர்நாடக மாநிலத்திற்கு என்ன செய்து இருக்கிறது என்று ராகுல் காந்தி டிவிட்டரில் பட்டியலிட்டு இருக்கிறார். அவர் தனது டிவிட்டில் மோடிக்கு மார்க் கொடுத்து ரேங்க் கார்ட் கொடுத்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

Karnataka Elections 2018: Rahul gives F grade on PM Modi governments contribution to the state

இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. களத்தில் நடப்பது போலவே சமூக வலைத்தளத்திலும் தீவிரமாக பிரச்சாரம் நடந்து வருகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் பெரிய யுத்தமே டிவிட்டரில் நடக்கிறது.

இந்த நிலையில்தான் மோடியின் மத்திய பாஜக அரசு கர்நாடக மாநிலத்திற்கு என்ன செய்து இருக்கிறது என்று ராகுல் காந்தி டிவிட்டரில் பட்டியலிட்டு இருக்கிறார். அவர் தனது டிவிட்டில் மோடிக்கு மார்க் கொடுத்து ரேங்க் கார்ட் கொடுத்துள்ளார்.

அதில் ''மோடியின் ரேங்க் அட்டை! மாநிலம்: கர்நாடகா, பிரிவு: விவசாயம். 8,500 கோடி கடன் தள்ளுபடி என்று கூறி ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து விவசாயிகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. தனியார் நிறுவனங்களுக்கு எல்லாம் கிடைக்கிறது. கர்நாடக விவசாயிகளுக்கு எம்எஸ்எஃப்+50 சதவிகிதத்தில் சலுகையும் கிடைக்கவில்லை. மொத்தத்தில் மோடியின் மத்திய அரசுக்கு எஃப் கிரேட்'' என்று ஃபெயில் கிரேட் கொடுத்துள்ளார்.

மேலும் இதில் விவசாயிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது, மத்திய அரசால் அவர்கள் எவ்வளவு நஷ்டம் அடைந்தார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது.

English summary
Karnataka Elections 2018: Rahul gives 'F' grade on PM Modi government's contribution to the statein twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X