4ம் தேதிக்குள் மேலாண்மை வாரியம், கர்நாடகம், தமிழகத்தில் ஆய்வு.. சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப் பிடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை மின்னல் வேகத்தில் அமைக்க உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட் இன்று கர்நாடக அரசுக்கு மிகக் கடுமையான கணடனத்தையும் தெரிவித்துள்ளது.
மேலாண்மை வாரியம் தொடர்பாக அது கிடுக்கிப்பிடி உத்தரவுகளையும் மத்திய அரசுக்கு இன்று பிறப்பித்தது.

சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் பிறப்பித்த சில அதிரடி உத்தரவுகள்:
- அக்டோபர் 1 முதல் 6ம் தேதி வரை தினசரி விநாடிக்கு 6000 கன அடி நீரை தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டும்.
- அக்டோபர் 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
- நாளை மாலைக்குள் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் தங்களது பிரதிநிதிகள் பட்டியலை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
- காவிரி மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் அக்டோபர் 4ல் கர்நாடகத்திற்கும், 5ம் தேதி தமிழகத்திலும் சுற்றுப்பயணம் செய்து அணை நிலவரங்களை ஆராய வேண்டும்.
- அக்டோபர் 6ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் தனது அறிக்கையை எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்,
- இதுதான் உங்களுக்கு கடைசி சான்ஸ். இதையும் மீறினால் சட்டத்தின் கோபத்தை நீங்கள் சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் கர்நாடக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications