ஊதுன்னுதானே சொன்னாங்க.. அதுக்கு ஏய்யா இப்படி ஒரு பேயாட்டம்!
மதுபோதையில் போலீசாரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

கர்நாடகா: அப்படி ஒன்னும் பெரிசா கேட்டுடல போலீஸார்... வாயை கொஞ்சம் ஊதி காட்டுங்கன்னு தான் சொன்னார்கள். அதுக்கே இப்படி ஒரு கொலைவெறி!!
கர்நாடகாவில் தேவனகிரி என்ற பகுதியில் பைக்கில் 2 பேர் ஃபுல் போதையில் வந்துகொண்டிருந்தனர். இதில் ஒருவர் வக்கீலாம். அந்த நேரம் பார்த்து, அங்கு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். கோணால் மாணலாக வண்டி வரும்போதே ஓரளவு தெரிந்துவிட்டது.
[ என்ன இருந்தாலும் டிரம்ப்பை இப்படி அவமானப்படுத்த கூடாது பாஸ்! ]

பெரிய தகராறு
தாறுமாறாக வந்த வண்டியை வழிமறித்து நிறுத்தினர். பிறகு அவர்களிடம் "எங்கே... ரெண்டு பேரும் வாயை கொஞ்சம் ஊதி காட்டுங்க" என்றார் ஒரு போலீஸ். இப்படி கேட்டதும் 2 பேருக்கும் கோபம் வந்துவிட்டது. உடனே யாரை பார்த்து ஊத சொல்றே?ன்னு ரெண்டு பேரும் போலீஸ்காரர்களிடம் சண்டைக்கு போய்விட்டார்கள். நடு ரோட்டில் நடந்த வாக்குவாதம் பெரிய தகராறாக போய்விட்டது.

மண்டையில் தாக்கினர்
மது போதை தலைக்கேறிய இருவருக்கும் போலீஸ்காரர்களை கண்டமேனிக்கு திட்டியும் ஆத்திரம் அடங்கவே இல்லை. அதனால பக்கத்துலயே ரோட்டோரத்தில் சட்டி பானைகள், மண் பொம்மைகள் விற்கும் கடை இருந்தது. அங்க இருந்து அந்த மண்பாண்டங்களை எடுத்து அங்கிருந்த ஒரு போலீசாரை சரமாரியாக தாக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நிலைகுலைந்து விழுந்தார்
இதனால் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது... இன்னொருவருக்கு மூக்கிலிருந்து பொல பொலவென ரத்தம் கொட்டியது. அப்போதும் அவர்கள் விடவில்லை. போலீஸ்காரரின் சட்டையை பிடித்து கீழே தள்ளினார். இதில் நிலைகுலைந்து அவர்விழுந்தார். கீழே ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் விழுந்து கிடந்த போலீஸ்காரரிடம் திரும்பவும் சண்டைக்கு போய்விட்டார்கள்.
|
சண்டை காட்சிகள்
இது தொடர்பாக தகவலறிந்து மற்ற போலீசார் விரைந்து வந்தனர். போதையில் கலாட்டா செய்து போலீசாரின் மண்டையை உடைத்தவர்களை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாயை ஊத சொன்னதற்காக, மூக்கு மண்டையெல்லாம் உடைத்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி உள்ளன. இந்த சண்டைக்காட்சிகள் அனைத்துமே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications