கூட நின்று செல்ஃபி எடுத்த மாணவனை அடித்து போனை உடைத்த அமைச்சர்.. அதிர்ச்சி வீடியோ
Recommended Video

பெங்களூர்: தன்னிடம் நின்று செல்ஃபி எடுத்த இளைஞனை கர்நாடக அமைச்சர் அடித்து தள்ளியது வீடியோவில் பதிவாகி வைரலாகியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் அரசில், மின்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் டி.கே.சிவகுமார். கிரானைட், ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், அடாவடிகளுக்கு பெயர் போனவர்.
நேற்று பெல்காமில் நடைபெற்ற 'குழந்தைகள் உரிமை' நிகழ்ச்சியில் அமைச்சர் சிவகுமார், பங்கேற்றபோது, மனித உரிமைகளை மீறி செயல்பட்டார் என்பதுதான் இதில் கவனிக்ககத்தக்கது.

செல்ஃபி முயற்சி
நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே நிருபர்களிடம் பேசுவதற்காக சிவகுமார் நின்றிருந்தார். அப்போது, அவரது பின்னால் ஒரு கல்லூரி மாணவன் தனது செல்போனை எடுத்து செல்ஃபி எடுக்க முற்பட்டார். அமைச்சருடன் தான் நிற்பதை போல படம் வர வேண்டும் என அவர் முயன்றார்.
|
ஓங்கி அடித்தார்
அப்போது எரிச்சலுற்ற சிவகுமார், திடீரென திரும்பி சட்டென அந்த மாணவன் கையை ஓங்கி அடித்துவிட்டார். இதனால் மாணவன் கையில் இருந்த போன் கீழே விழுந்து நொறுங்கியது. போனை எடுக்க மாணவன் ஓடிய நிலையில், எதுவுமே நடக்காததை போல பிரஸ் மீட்டை ஆரம்பித்தார் அமைச்சர்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ஒரு பெரிய விஷயம் இல்லை என சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். யாராக இருந்தாலும் அடிப்படை அறிவு இருக்க வேண்டும். பேட்டியளிக்கும்போது எனக்கு இடையூறு செய்வது சரியான செயல் இல்லை என்று சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

கண்டனங்கள்
இதனிடையே சிவகுமாரின் செயலுக்கு எதிர்க்கட்சியான பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சரின் தொடர் அராஜக போக்கின் வெளிப்பாடு இது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டித்துள்ளனர். சொத்து குவிப்பு தொடர்பாக, சிவகுமார் வீடு மற்றும் அலுவலகத்தில் சில மாதங்கள் முன்பு வருமான வரித்துறை ரெய்டுகள் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications