கனிம சுரங்க ஊழல்: கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட் ராஜினாமா
பெங்களூர்: கனிம சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட் நேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தகவல் துறை அமைச்சராக இருந்தவர் சந்தோஷ் லாட். இவர் ஒரு கனிம சுரங்க நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார். இந்த நிலையில், அவரது கனிம சுரங்க நிறுவனம் சட்டவிரோத சுரங்க தொழிலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் சந்தோஷ் லாட் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி போர்க்கொடி உயர்த்தியது. ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்று கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தது.
இந்நிலையில், கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் பெல்காமில் வருகிற 25-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. சந்தோஷ் லாட் ராஜினாமா விவகாரத்தில் அரசு உடனடியாக முடிவு எடுக்காவிட்டால், சட்டசபை கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என்றும் பாஜக போர்க்கொடி உயர்த்தியது.
இதனால் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி முற்றியது. இதைத்தொடர்ந்து அமைச்சர் சந்தோஷ் லாட்டை பதவியில் இருந்து விடுவிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சந்தோஷ் லாட் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவர் இன்று ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுக்க இருக்கிறார்.
கனிம சுரங்க ஊழல் தொடர்பான முன்னாள் லோக் அயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவின் அறிக்கை தான் கடந்த பாரதிய ஆட்சியை ஆட்டிப் படைத்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், அதை ஆயுதமாக எடுத்துக் கொண்டு பிரச்சினையை கிளப்பியது.
தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் அதே ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications