Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது சபாநாயகர் பதவியா? தலை தெறிக்க ஓடும் கர்நாடகா காங். தலைவர்கள்.. அப்படி ஒரு சென்டிமெண்ட்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டாம் என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனராம். சபாநாயகர் பதவியில் அமர்ந்தவர்கள் அரசியல் எதிர்காலம் எல்லாம் சூனியமாகிவிடுகிறது என்கிற அச்சம்தான் இதற்கு காரணம் என்கின்றன கன்னட ஊடகங்கள்.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. துணை முதல்வராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார் மற்றும் மொத்தம் 8 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

Karnataka Senior Congress leaders reject Assembly speaker post

இந்நிலையில் கர்நாடகா சட்டசபை முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டம் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்க உள்ளனர். தற்காலிக சபாநாயகராக 9 முறை எம்.எல்.ஏ.வாக வென்ற தேஷ்பாண்டே செயல்படுவார் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். மொத்தம் உள்ள 224 எம்.எல்.ஏக்களும் தேஷ்பாண்டே பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இதனிடையே புதிய சபாநாயகர் யார் என்பது குறித்து எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை. ஏனெனில் சபாநாயகர் பதவியை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஏற்க மறுத்து வருகின்றனர். தங்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் ஓகே.. சபாநாயகர் பதவி எல்லாம் வேண்டாம் என்கின்றனராம். இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. கர்நாடகா சட்டசபையில் சபாநாயகராக பதவி வகிப்பவர்கள் அடுத்த தேர்தலில் பொதுவாக ஜெயிப்பதும் இல்லை; அவர்களது அரசியல் வாழ்வும் சூனியமாகிவிடுகிறது என்கிற அச்சம்தான் அந்த காரணமாம்.

Karnataka Senior Congress leaders reject Assembly speaker post

முந்தைய பாஜக அரசில் விஸ்வேஸ்வரா ஹெக்டே, சபாநாயகராக இருந்தார். அவர் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் சபாநாயகர் பதவி வகித்தவர்கள் இப்படி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகின்றனராம். 2004-ம் ஆண்டு எஸ்.எம்.கிருஷ்ணா அரசில் கிருஷ்ணா சபாநாயகராக இருந்தார். 2008 தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். 2013-ல் காங்கிரஸின் ககொடு திம்மப்பா சபாநாயகராக இருந்தார். அவரும் 2018 தேர்தலில் தோல்வியைத் தழுவிவிட்டார். 2016-ல் சபாநாயகராக இருந்த கேபி கோலிவாட், 2018 தேர்தல் மற்றும் 2019 இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவினார். காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அரசில் சபாநாயகராக இருந்த ரமேஷ்குமாரும் இந்த தேர்தலில் தோற்றுப் போனார். இத்தகைய சென்டிமெண்ட் அச்சுற்றுத்தலால்தான் சபாநாயகர் பதவியை ஏற்க மறுக்கின்றனராம் காங்கிரஸ் தலைவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+