தமிழர்களைக் காக்க இரவு பகலாக செயல்படும் கர்நாடக தமிழ்ச் சங்கங்கள் #cauvery
பெங்களூரு: பெங்களூரு, மைசூரு என கர்நாடகத்தில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களும் அரசுடன் இணைந்து தமிழர்களைப் பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளன.
இதுவரை தனிப்பட்ட முறையில் தமிழர்கள் தாக்கப்படவில்லை என்றும் அவை கூறுகின்றன. அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதாலும், முதல்வர் சித்தராமையாவை தொடர்ந்து தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகின்றனராம்.

இதுகுறித்து வாட்ஸ் ஆப் மூலமாக பல்வேறு தொலைபேசி எண்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து மைசூர் தங்கச் சங்க பொதுச் செயலாளர் கு. புகழேந்தி கூறுகையில், 12.9.2016 காலையிலிருந்து இரவு 11 மணி வரை கர்நாடகத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்தோம்.எந்த மாவட்டத்திலும் தமிழர்கள் மீது தனிப்பட்ட முறையிலோ குழுவாகவோ வந்து தாக்குதல் எதுவும் நடக்கவில்லை.எந்த ஒரு தமிழரும் பயப்படத் தேவையில்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் உடனே கண்ட்ரோல் ரூம் 100 க்கு தொடர்பு கொள்ளவும் மற்றும் மைசூர் தமிழ்ச்சங்கத்தையும் தொடர்பு கொள்ளவும். உடனடியாக உரிய பாதுகாப்பு கர்நாடக காவல்துறை மூலம் கொடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அவரது தொடர்பு எண் 94480 54831, 94489 05831.
இதேபோல கர்நாடகாவில் உள்ள தமிழர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் கர்நாடகாவில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் போர் கால அடிப்படையில் செயல்படுகிறது, கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட தமிழர்களும்,இன்னும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ள தமிழர்களும் உடனடியாக எம்மை தொடர்பு கொள்ளவும் என்று நான்காம் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த வ. சிவா கூறியுள்ளார். அவரது தொலைபேசி எண் +918608572345.
மாவட்ட வாரியாக தமிழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் மற்றும் கை பேசி எண்கள்
மைசூர் மாவட்டம். நஞ்சன்கூடு. சீனிவாசன். தலைவர். நஞ்சன்கூடு தமிழ் சங்கம். 8105517263
ஹெக்கட தேவன கோட்டைத் தமிழ்ச் சங்கம்.
நகுல்சாமி - 9449532255
தேவராஜன் - 9449002205
பழனிச்சாமி - 9741063117
பெரியசாமி - 9986330781
உன்சூர் தமிழ் சங்கம்
சின்னசாமி - 9945046727
வேலு - 9620484120
முருகன் - 9448737069
மணி - 9449993229
நான்காம்தமிழ்ச்சங்கம் +918608572345












Click it and Unblock the Notifications