காவிரியின் குறுக்கே அணை: ரூ.5000 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு ரெடி: கர்நாடக அமைச்சர்
பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு ரூ.5000 கோடி மதிப்பிலான திட்ட மதிப்பீடு தயார் என கர்நாடக மாநில நீர் பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்தார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அங்கு தேக்கி வைக்கப்படும் நீரை குடிநீருக்கும், மின் உற்பத்திக்கும் பயன்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு மற்றும் அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இருந்தபோதிலும் மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணி முடிவடைந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் பெங்களூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:
பெங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான விவரமான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாராகிவிட்டது. இதற்கு அனுமதி வழங்கக்கோரி அடுத்த மாதம் இந்த அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும். ரூ.5 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்டப்படும். இந்த புதிய அணை கட்டப்பட்டால் 60 டி.எம்.சி. தண்ணீர் நமக்கு கிடைக்கும்.
ஜூன் 15ம் தேதி வரை குடிநீருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அணைகளில் தண்ணீர் காலியானால் மட்டுமே டெட் ஸ்டோரேஜ் தண்ணீர் பயன்படுத்தப்படும் என்றார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications