Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்லீம் எம்பி ஹசனை மணக்க போகிறேன்.. இனிமேல் ஓவைசி எனக்கு மச்சான்.. கர்னி சேனா தலைவர் ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த கர்னி சேனா தேசிய துணைத் தலைவர் தாகூர் யோகேந்திர சிங் ராணா, கைரானா எம்பி இக்ரா ஹசன் பற்றி சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். கைரானா எம்பி இக்ரா ஹசனை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ராணா கூறி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. இந்த செயல் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இக்ரா ஹசன் மீதான கருத்துக்கள்: கர்னி சேனா தலைவர் சர்ச்சை

சமாஜ்வாதி கட்சித் தலைவரும், கைரானா எம்பியுமான இக்ரா ஹசன் குறித்து கர்னி சேனா தலைவர் ராணா அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அந்த வீடியோவில், ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி மற்றும் அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசியையும் அவர் வம்புக்கு இழுத்துள்ளார்.

Uttar Pradesh

இஸ்லாமியர்களை கடுமையாக எதிர்க்கும் ராணா தனது வீடியோவில், இக்ரா ஹசனைத் திருமணம் செய்ய விரும்புவதாகவும், குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதியதாகவும் தெரிவித்தார். மேலும், ஒவைசி சகோதரர்கள் தன்னை "மச்சான்" என்று அழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

போஸ்டில் இருந்தது என்ன?

அந்த போஸ்டில், "கைரானா எம்.பி. இக்ரா ஹசன் இன்னும் திருமணமாகாதவர். அவரை விட நான் ஒன்றும் குறைவான அழகுடையவன் இல்லை. எனக்கு நல்ல வீடும், சொத்துக்களும் உள்ளன. நான் என் மனைவியிடமும் அனுமதி வாங்கிவிட்டேன். மொராதாபாத்தில் எனக்கு நிறைய வீடுகள் உள்ளன. இக்ரா விரும்பினால் என்னை திருமணம் செய்து கொள்ளலாம். நான் அவரை என் வீட்டில் தொழுகை நடத்த அனுமதிக்கிறேன். ஆனால் அசாதுதீன் ஒவைசி மற்றும் அக்பருதீன் ஒவைசி என்னை 'மச்சான்' என்று அழைக்க வேண்டும். இக்ரா ஹசனுடனான திருமணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், அவரும் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று ராணா வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

மனைவி ஓகே சொல்லிவிட்டார்

ராணா தனது ஃபேஸ்புக் வீடியோவில் இதே விஷயத்தை குறிப்பிட்டுள்ளார், இக்ரா ஹசனை மணக்க விரும்புவதாகவும், மனைவி அனுமதி அளித்ததாகவும் தெரிவித்தார். மேலும், இக்ரா தனது வீட்டில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார், ஆனால் ஒவைசி சகோதரர்கள் என்னை "மச்சான்" என்று அழைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இந்த அறிவிப்பு பலரையும் முகம் சுளிக்க வைத்து உள்ளது. இஸ்லாமியர்களை கடுமையாக எதிர்க்கும் கர்னி சேனாவை நடத்தும் இவர் இஸ்லாமிய பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி அநாகரீகமாக வீடியோ வெளியிட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது.

ராணாவின் இந்த வீடியோ மற்றும் போஸ்டை வெளியிட்ட பிறகு, பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். அரசியல் விமர்சகர்கள் ராணாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்புகளுக்குப் பிறகு, ராணா இரண்டு மணி நேரத்தில் அந்தப் பதிவையும், வீடியோவையும் நீக்கினார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் ராணாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தன.

ராணாவின் கருத்துக்கள் மோசமானவை என்றும், பெண்களை அவமதிக்கும் செயல் என்றும் பலர் கண்டித்தனர். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இக்ரா ஹசன் 2024 தேர்தலில் கைரானா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+