கை காட்டிய ஆடிட்டர்... மாட்டிய கார்த்தி - நேருக்கு நேர் விசாரிக்க சிபிஐ திட்டம்
கார்த்தி சிதம்பரத்தை கை காட்டி விட்டது பாஸ்கரராமன்தான் என்பதால் இருவரையும் ஒரே அறையில் நேருக்கு நேராக வைத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

டெல்லி: மும்பை சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, டெல்லி சிறையில் உள்ள ஆடிட்டர் பாஸ்கரராமன், ஆகியோரையும் காவலில் எடுத்து கார்த்தி சிதம்பரத்துடன் சேர்த்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2007ஆம் ஆண்டில் ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் வெளிநாட்டில் இருந்து அன்னிய நேரடி முதலீடுகளைப் பெற விண்ணப்பித்தது. ரூ 4.62 கோடி முதலீட்டைப் பெற அன்னிய மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும்.

கார்த்தி சிதம்பரம்
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக அனுமதி பெற்றுத் தந்தார் என்பது புகார்.

வழக்கு பதிவு செய்த சிபிஐ
இதற்காக கார்த்தி சிதம்பரம் தனது அட்வான்டேஜ் ஸ்டிராடஜ் கன்சல்டிங் பிரைட்வேட் லிமிட் நிறுவனம் மூலம் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி ரூ.10 லட்சம் பெற்றதாக சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது. கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் பலமுறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

ஆடிட்டர் கைது
இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு அமலாக்கப் பிரிவு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத காரணத்தால் கடந்த மாதம் 16ஆம் தேதி டெல்லியில் சிபிஐ கைது செய்தது. இவரிடம் சிபிஐ போலீசார் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர். கடந்த 26ஆம் தேதி அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிபிஐ விசாரணையில் கார்த்தியை கை காட்டி விட்டார் ஆடிட்டர் பாஸ்கரராமன்.

லுக் அவுட் நோட்டீஸ்
இந்த வழக்குகளில் ஆஜராகக் கோரி கார்த்திக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரி 18ஆம் தேதியன்று அவர் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனிடையே கார்த்தி வெளிநாடு தப்பி சென்று விடாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சிபிஐ காவலில் விசாரணை
இதனிடையே சிபிஐ அனுமதியுடன் வெளிநாடு சென்று திரும்பிய கார்த்தி சிதம்பரம் கடந்த 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாட்கள் கஷ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதல்நாளான இன்று காலை 8 மணிமுதல் பல கேள்விகளைக் கேட்டு குடைந்துள்ளனர். ஆனால் எந்த கேள்விக்குமே கார்த்தி பதில் கூறாமல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேருக்கு நேர் விசாரணை
கார்த்தி சிதம்பரத்தை கை காட்டி விட்டது பாஸ்கரராமன்தான் என்பதால் இருவரையும் ஒரே அறையில் நேருக்கு நேராக வைத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் கார்த்தி சிதம்பரத்தின் கணக்கில் வராத சொத்துக்களை பராமரித்தல், கணக்கில் கொண்டு வருதல் போன்றவற்றை பாஸ்கரராமன் செய்துவந்ததாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications