ஐஎன்எக்ஸ் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் வரும் 23-ல் ஆஜராக உத்தரவு!
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் 23-ல் கார்த்தி சிதம்பரம்.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சிபிஐ முன்பு வரும் 23-ல் ஆஜராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய முதலீட்டு அனுமதியை பெற்றுக் கொடுத்ததில் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்தார் என்பது சிபிஐ வழக்கு. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அதாவது லுக் அவுட் நோட்டீஸை உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது.

ஹைகோர்ட் உத்தரவு
இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் உள்துறை அமைச்சகத்தின் லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அத்துடன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லவும் அனுமதித்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் இந்த தடைக்கு எதிராக சிபிஐ உச்சநீதிமன்றம் சென்றது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்தது. அவர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகத்தான் வேண்டும் என உத்தரவிட்டது. அப்போது கார்த்தி சிதம்பரம் தரப்பில் பாதுகாப்பு தரவும் கோரப்பட்டது. இதனை ஏற்று விசாரணையின் போது ஒரு வழக்கறிஞரை வைத்து கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தது.

விசாரணைக்கு ஆஜராக வேண்டும்
மேலும் சென்னை உயர்நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீஸுக்கு பிறப்பித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல முடியாமல் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ளாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

வரும் 23-ல் ஆஜராக உத்தரவு
இந்நிலையில் வரும் 23-ந் தேதி சிபிஐ முன்பாக கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications